டயனா கமகேவுக்கு கடவுச்சீட்டு விநியோகித்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் - முஜிபுர் ரஹ்மான்

Published By: Digital Desk 7

13 May, 2024 | 05:27 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

டயனா கமகே இந்த நாட்டு பிரஜை அல்ல என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் அறிந்திருந்தும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக செயற்படுத்த அவரை தவறாக பயன்படுத்தி வந்துள்ளது.

அத்துடன் எமது நாட்டு பிரஜை அல்லாத டயனாவுக்கு குடிவரவு குடியகல்வு முன்னாள் கட்டுப்பாட்டு அதிகாரி  கடவுச்சீட்டு விநியோகிக்க மறுத்துள்ளபோதும் தற்போதுள்ள கட்டுப்பாட்டு அதிகாரி எவ்வாறு கடவுச்சீட்டு விநியோகித்தது என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை(13) இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காகவேண்டி கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு சென்றேன். ஆனால் அரசாங்கம் பணம் இல்லை என தெரிவித்து தேர்தலை நடத்தாமல் விட்டு விட்டது.

நான் நேர்மையாகவே எனது பதவியை இராஜினாமா செய்தேன். அதனாலே நான் மீண்டும் இந்த சபைக்கு வர முடிந்தது. ஆனால் டயனா கமகே நேர்மையற்ற முறையில் செயற்பட்டு வந்ததால், அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் போயுள்ளது. 

டயனா கமகே இந்த நாட்டு பிரஜை அல்ல என்பதை அவர் ஆரம்பத்தில் எங்களுக்கும் மறைத்திருந்தார். அது தொடர்பான உண்மை எமக்கு தெரியவந்ததுடன் அது தொடர்பில் நாங்கள் நீதிமன்றில் முறையிட்டோம்.

ஆனால் ஜனாதிபதியும் அரசாங்கமும் டயனாவை பாதுகாத்து வந்தது. ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராகவும் சஜித் பிரேமதாசவுக்கு எதிராகவும் செயற்பட அரசாங்கம் அவரை வழிநடத்தி வந்தது. அதனாலே பாராளுமன்றத்தில் ஒவ்வொரு முறையும் எமது கட்சி தலைவருக்கு எதிராக அவர் உரையாற்றி வந்தார்.

அதேநேரம் டயனா கமகே இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள விண்ணப்பித்திருந்தபோது, அவர் இந்த நாட்டு பிரஜை அல்ல என தெரிவித்து, அவருக்கு கடவுச்சீட்டு விநியோகிக்க முடியாது என குடிவரவு குடியகல்வு முன்னாள் கட்டுப்பாட்டு அதிகாரி பாராளுமன்ற முனனாள் செயலாளருக்கு அறிவித்திருந்தார்.

அத்துடன் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நான் இந்த சபையில் உரையாற்றும்போது, இந்த சபையில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் இருக்கிறார். அது தொடர்பில்  தேடிப்பார்க்குமாறு சபாநாயகரை கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்வரை சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் டயனா கமகேவுக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு விநியோகிக்க முடியாது என குடிவரவு குடியகல்வு முன்னாள் கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்திருந்தபோதும் தற்போதுள்ள கட்டுப்பாட்டு அதிகாரி கடந்த 2022, 09, 12ஆம் திகதி அன்று அவருக்கு இராஜதந்திர கட்வுச்சீட்டு விநியோகித்துள்ளது.

அப்போது நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவாகும். எமது நாட்டு பிரஜை அல்லாத ஒருவருக்கு தற்போதுள்ள குடிவரவு குடியகல்வு  கட்டுப்பாட்டு அதிகாரிஎந்த அடிப்படையில் கடவுச்சீட்டு விநியோகித்தார். அவருக்கு அதற்காக யார் அழுத்தம் கொடுத்தார் என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலீடு, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதை பிரதிநிதித்துவப்படுத்தும்...

2024-12-13 02:13:40
news-image

உதயங்க, கபிலவுக்கு எதிராக புதிய அரசாங்கம்...

2024-12-13 01:02:13
news-image

'கோட்டாபய - பகுதி 2'ஆக மாறிவிட்டாரா...

2024-12-12 17:28:10
news-image

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள...

2024-12-12 21:13:18
news-image

விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்வனவு செய்ய...

2024-12-12 17:20:39
news-image

சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி...

2024-12-12 21:12:41
news-image

சபாநாயகரின் “கலாநிதி” பட்டம் தொடர்பான சர்ச்சை...

2024-12-12 17:06:16
news-image

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டு...

2024-12-12 21:15:23
news-image

கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சை :...

2024-12-12 17:04:17
news-image

உதயங்க, கபிலவுக்கு எதிராக புதிய அரசாங்கம்...

2024-12-12 19:27:14
news-image

மக்களுக்கிடையிலான இராஜதந்திரத்தின் உதாரணமாக அமைதிப்படை நிகழ்ச்சித்திட்டம்...

2024-12-12 19:23:22
news-image

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு...

2024-12-12 18:11:27