க. பொ .த சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கில வினாத்தாளை மாணவர்கள் குழுவிற்கு வாட்ஸ்அப் குழுவில் வெளியிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவின் அம்பதென்ன குடுகல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான ரோஹன சந்திரசிறி பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் கேள்வித்தாள் வெளியான வாட்ஸ்அப் குழுவின் அட்மின் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மஹியங்கனை புஹுல்யாய பிரதேசத்தில் வசிக்கும் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரிடமும் ஹசலக்க பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
குறித்த வாட்ஸ்அப் குழுவில் இந்த ஆசிரியரின் இலக்கம் இருந்ததால், அவரின் கைத்தொலைபேசி பொலிஸாரின் பாதுகாப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட மேலதிக வகுப்பு ஆசிரியரின் தாயார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ஒருவர் என்பதுடன், அவரது தொலைபேசியும் பொலிஸ் பாதுகாப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM