ரஷ்ய யுத்தக்களத்தில் இலங்கையர்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்படுவார்கள் - விசாரணையை மேற்கொள்ளுங்கள் என்கிறார் தயாசிறி

Published By: Digital Desk 3

13 May, 2024 | 05:35 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

ரஷ்ய யுத்த களத்தில் பாதிக்கப்பட்டுள்ள 600 இலங்கையர்களை  நாட்டுக்கு அழைத்து வர இராஜதந்திர மட்டத்தில் துரித நடவடிக்கைளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் இல்லையேல் இன்னும் 10 நாட்களுக்குள் இலங்கையர்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்படுவார்கள் என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 ரஷ்யா- உக்ரைன்  யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஓய்வு பெற்ற இலங்கை இராணுவத்தினர்  ரஷ்ய யுத்தக்களத்துக்கு சென்று பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.

தாம் யுத்தகளத்துக்கு செல்கிறோம் என்பதை அறியாமலே இவர்கள்  அங்கு சென்றுள்ளார்கள்.இவ்விடயம் தொடர்பில் தேசிய மட்டத்தில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு,ஓய்வுப் பெற்ற இரு மேஜர் ஜெனரல்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

 தேசிய மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இராஜதந்திர மட்டத்திலும் துரித விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

ரஷ்ய - உக்ரைன் யுத்தத்தை இன்னும் 10 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்ய இராணுவம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

ரஷ்ய யுத்தக்களத்தில் இணைந்துள்ள இலங்கை இராணுவத்தினரை முன்னிலையில் அனுப்புவதற்கும், அவர்களை தற்கொலை தாக்குதல்தாரிகளாக மாற்றுவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. ஆகவே  இது பாரதூரமானது.இதனை மனிதாபிமான அடிப்படையில்  ஆராய வேண்டும்.

இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கு விசேட குழுவினரை அனுப்பி அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இவர்களை நாட்டுக்கு அழைத்து வர வேண்டும்.சுமார் 600 இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே இதனை அலட்சியப்படுத்த வேண்டாம்.துரிதமாக செயற்பட்டு இவர்களை நாட்டுக்கு அழைத்து வருமாறு அரசாங்கத்திடம் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறப்பு அதிரடிப்படையினரால் ரூ.35 மில்லியன் மதிப்புள்ள...

2025-06-20 19:29:53
news-image

மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-06-20 18:44:35
news-image

முதலீடுகளை ஈர்ப்பதற்கு புதிய வழிமுறையில் கவனம்...

2025-06-20 18:31:53
news-image

புதைக்கப்பட்ட எம்மவர் உயிருக்கு நீதிவேண்டும்-செம்மணியில் போராட்டம்

2025-06-20 20:04:10
news-image

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்:...

2025-06-20 18:25:28
news-image

கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த சந்தேக...

2025-06-20 17:37:13
news-image

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர் தம்புத்தேகம மத்திய...

2025-06-20 17:47:41
news-image

முல்லைத்தீவு- உடையார்கட்டில் காலாவதியான பொருட்கள் விற்பனை...

2025-06-20 17:47:04
news-image

சட்டவிரோத தொழிலாளர்களின் அடாவடித்தனத்தை கண்டித்தல் தொர்பான...

2025-06-20 17:18:43
news-image

தேசபந்து தென்னக்கோன் சார்பில் 28 சாட்சியாளர்கள்...

2025-06-20 17:13:06
news-image

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் போதைப்பொருளுடன்...

2025-06-20 16:36:42
news-image

சபாநாயகரை சந்தித்தார் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்

2025-06-20 17:09:00