'லெஜெண்டஸ் 1979' : பம்பலப்பிட்டி இந்து கல்லூரி பழைய மாணவர்கள் டுபாயில் ஒன்றுகூடல்

13 May, 2024 | 11:41 AM
image

கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரி 98ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்களின் 45ஆவது பிறந்த தின ஒன்றுகூடல் நிகழ்வு டுபாய் நகரில் நடைபெற்றது. 

'லெஜெண்ட்ஸ் 1979' எனும் தொனிப்பொருளில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை உட்பட 16 நாடுகளில் இருந்து 79 பேர் கலந்துகொண்டனர்.

பழைய மாணவர்கள் மத்தியில் நல்லுறவை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் பாடசாலையை அடையாளப்படுத்தும் வகையில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ரீசேர்ட்டுக்களை அணிந்திருந்ததுடன், பாலைவனத்துக்கான விஜயத்தின்போது, தமிழர்களின் அடையாளத்தினை பறைசாற்றும் கலாசார அடையாள வேட்டி அணிந்திருந்தனர். 

இந்நிலையில், கொழும்பு இந்து கல்லூரியின் பழைய மாணவர்களால் தமது பாடசாலையின் மகத்துவம் மற்றும் தமிழர்களின் கலாசார விழுமியங்கள் தொடர்பாகவும் தமது ஒன்றுகூடலின் நோக்கம் தொடர்பாகவும் பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. 

இந்த ஒன்றுகூடலை முன்னிட்டு சிவமயூரன் மற்றும் கஜமுகன் ஆகியோரால்  தென்னிந்திய திரையிசை பாடல்களுக்கு நிகரான பாடலொன்று தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினரால்...

2024-05-25 01:06:56
news-image

குணராஜா நக்கீரன் எழுதிய 'திருக்குறளும் சுக...

2024-05-24 18:23:58
news-image

“ரூபா 2023” புகைப்படப் போட்டியில் திருகோணமலை...

2024-05-24 16:04:53
news-image

வெசாக் பண்டிகை அன்னதானம் 

2024-05-23 18:36:21
news-image

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் தீர்த்தோற்சவம் 

2024-05-23 18:32:55
news-image

உலக சர்வதேச வணிக அமைப்பின் விருது...

2024-05-23 18:00:46
news-image

ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத்தின் 'யாத்திரை' நூல்...

2024-05-23 13:08:45
news-image

திருகோணமலையில் "இலங்கையிலும் அதற்கு அப்பாலும் வரலாறு...

2024-05-22 16:29:56
news-image

சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலய...

2024-05-22 16:15:43
news-image

ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் இடம்பெற்ற...

2024-05-22 16:45:06
news-image

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இரத பவனி 

2024-05-22 18:28:43
news-image

வைகாசி விசாகத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி...

2024-05-22 13:48:38