(நெவில் அன்தனி)
பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (12) இரவு மின்னொளியில் நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 62ஆவது போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸை எதிர்த்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 47 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
ப்ளே ஓவ் சுற்று தகுதியைப் பெறுவதற்கு கடுமையாக போராடும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இது மிகவும் அவசியமான வெற்றியாக அமைந்தது.
இந்த வெற்றியுடன் 12 புள்ளிகளைப் பெற்றுள்ள றோயல் செலஞசர்ஸ் பெங்களூரு, அணிகள் நிலையில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.
எவ்வாறாயினும் அணியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
பவ் டு ப்ளெசிஸ் (6), விராத் கோஹ்லி (27) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 4ஆவது ஓவரில் 36 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
எனினும் வில் ஜெக்ஸ், ராஜாத் பட்டிடார் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.
ராஜாத் பட்டிடார் 32 பந்துகளில் 52 ஓட்டங்களையும் வில் ஜெக்ஸ் 29 பந்துகளில் 41 ஓட்டங்களையும் பெற்று 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
தொடர்ந்து கெமரன் க்றீன் திறமையாத் துடுப்பெடுத்தாடி 24 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ரஷிக் சலாம் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கலீல் அஹ்மத் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 140 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
டெல்ஹியின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது.
சுமார் 3 வாரங்களின் பின்னர் மீண்டும் அணியில் இடம்பெற்ற டேவிட் வோர்னர் (1) முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து அபிஷேக் பொரெல் (2), ஜேக் ப்ரேசர் மெக்கேர்க் (21) ஆகிய இருவரும் மொத்த எண்ணிக்கை 24 ஓட்டங்களாக இருந்தபோது அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து குமார் குஷாக்ரா (2) மூன்று பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு ஆட்டம இழந்து வெளியேறினார்.
எனினும் ஷாய் ஹோப், பதில் அணித் தலைவர் அக்சார் பட்டேல் ஆகிய இருநரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
ஆனால், மீண்டும் விக்கெட் கள் சீரான இடைவெளியில் விழத் தொடங்கின.
ஷாய் ஹோப் 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, அதன் பின்னர் மேலும் 2 விக்கெட்கள் சரிந்தன.
ஒரு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த அக்சார் பட்டேல் 57 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்ததும் டெல்ஹி அணி தோல்வி அடைவது உறுதியாயிற்று.
பந்துவீச்சில் யாஷ் தயாள் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லொக்கி பேர்கசன் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM