ராஜஸ்தானை வீழ்த்தி ப்ளே ஒவ் வாய்ப்பை சற்று அதிகரித்துக் கொண்டது சென்னை

Published By: Vishnu

12 May, 2024 | 09:14 PM
image

(நெவில் அன்தனி)

சென்னை எம். ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 61ஆவது போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸை எதிர்த்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் தனது ப்ளே ஓவ் வாய்ப்பை சென்னை சுப்பர் கிங்ஸ் சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.

எனினும் சென்னைக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருடன் மாத்திரம் ஒரு போட்டி மிஞ்சியிருப்பதுடன் அப் போட்டி இலகுவாக அமையப்போவதில்லை.

சுவாரஸ்யம் இன்றி நடைபெற்ற இப் போட்டியில் மிகத் துல்லியமாக பந்துவீசி ராஜஸ்தான் றோயல்ஸை சுமாரான மொத்த எண்ணிக்கைக்கு கட்டுப்படுத்திய சென்னை  சுப்பர்  கிங்ஸ், நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி வெற்றியீட்டியது.

ராஜஸ்தான் றோயல்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 142 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை  சுப்பர்   கிங்ஸ் 18.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்று மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

சென்னையின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்துகொண்டிருக்க, அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாட் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 41 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 42 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

அவரைவிட ரச்சின் ரவிந்த்ரா (27), டெரில் மிச்செல் (22), ஷிவம் டுபே (18), சமீர் ரிஸ்வி (15 ஆ.இ.) ஆகிய நால்வரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது.

பெரிய அளவில் அதிரடி வெளிப்படாத இப் போட்டியில் ரியான் பராக் பெற்ற ஆட்டம் இழக்காத 47 ஓட்டங்களே தனி ஒருவரால் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.

அவரை விட யஷஸ்வி ஜய்ஸ்வால் (24), ஜொஸ் பட்லர் (21), த்ருவ் ஜுரெல் (28), அணித் தலைவர் சஞ்சு செம்சன் (15) ஆகியோர் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் சிமர்ஜீத் சிங் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துஷார் தேஷ்பாண்டே 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்: சிமர்ஜீத் சிங

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12