(க.கமலநாதன்)

நாட்டில் தற்போதுள்ள தலைமைத்துவங்கள் யார் என்பதே தெரியாதுள்ளது. நாட்டின் வளங்களை சீனாவிற்கும் இந்தியாவிற்கும் விற்பனை செய்கின்றனர், மறுபுறத்தில் வடக்கு கிழக்கிலுள்ள இராணுவம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் புலிகளும் தமிழ் பிரிவினைவாத அமைப்புக்களும் மீண்டும் தலைதூக்கியுள்ளனர்.

எனவே தற்போதைய ஆட்சியாளர்களை வீட்டிற்கு துரத்த வேண்டிய அவசியம் தோன்றியுள்ளதை நாம் உணர்ந்துள்ளோம். எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 15 பிக்குகள் சங்கத்தை திரட்டிக்கொண்டு தற்போதைய ஆட்சியாளர்களை வீட்டிற்கு துரத்துவோம் என பொதுபல சேன, ராவணா பலய, சிங்கள ராவய, தாதியர் சங்கம் ஆகிய சிங்கள அமைப்புக்கள் ஒருமித்து சூளுரைத்தனர்.

நாராஹேன்பிட்டி அபயராம விஹாரையில் இடம்பெற்ற மேற்படி அமைப்பினை சேர்ந்த பிக்குகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வமைப்புக்களின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு சூளுைத்தார்கள்.