சஜித் ஆரம்பித்த வீடமைப்பு நிர்மாணப்பணிகளை நிறைவு செய்ய அரசாங்கத்திடம் நிதி கோரும் வீடமைப்பு அதிகாரசபை

12 May, 2024 | 10:00 PM
image

தற்போதைய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக  இருந்த போது நாடு பூராகவும்  முறைசாரா முறையில் ஆரம்பிக்கப்பட்ட நிர்மாணப்பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள 44,053 வீடுகளை நிர்மாணிப்பதற்கு 15,244.58 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

இந்த ஏற்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் அமைச்சர், இந்த வருடத்திற்குள் அந்த வீடுகளின் நிர்மாணப்பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்த 2015-2019 காலப்பகுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 07 வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.

இந்த 07 திட்டங்களாக மாதிரி கிராம திட்டம், விசிறி  கடன் (உதவி) திட்டம், கிராம சக்தி விசிறி  உதவி, விசிறி கடன் திட்டம், விரு சுமித்துறு, சிறுநீரக உதவி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கில் வீடுகளை நிர்மாணித்தல் என்பன அடங்கும்.

இந்த வேலைத்திட்டங்களை செயல்படுத்தும் போது, அன்றைய வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வரம்பிற்கு அப்பால் வீடுகளை நிர்மாணிப்பதற்கு செயற்படுத்தியுள்ளார். தேவையான நிதி இல்லாத காரணத்தினால் இந்த வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஒரு உதா கம்மான திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை பல உதா கம்மானங்களுக்கு பகுதிகளாக ஒதுக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கூறுகிறது. தான் அமைச்சராக இருந்த காலத்தில் பல வீடமைப்புக் கிராமங்களை நிர்மாணித்ததாகக் காட்டும் நோக்கில் அவர் இதனைச் செய்துள்ளதாக அதிகார சபை மேலும் குறிப்பிடுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இந்த வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை புதிய வீட்டுத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டாம் என தீர்மானித்ததுடன், அதற்குத் தேவையான ஏற்பாடுகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி, மாதிரி கிராம திட்டத்தின் கீழ் 28,537 வீடுகளும், விசிறி கடன் திட்டத்தின் கீழ் 7,063 வீடுகளும், விசிறி கடன் உதவித் திட்டத்தின் கீழ் 1,036 வீடுகளும், கிராம சக்தி திட்டத்தின் கீழ் 1,318 வீடுகளும், விரு சுமித்துறு உதவித்  திட்டத்தின் கீழ் 53 வீடுகளும், சிறுநீரக நோயாளிகள் திட்டத்தில் 1,416 வீடுகளும்,  வெள்ள நிவாரணத் திட்டத்தின் கீழ் 4,630 வீடுகளுமாக மொத்தம்  44,053 வீடுகளின் பணிகள் முடிக்கப்பட உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34