பாடசாலை மாணவர்கள் சிலர் பனிமலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடிரென ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக சுமார் 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கருகிலுள்ள ஜான்சு பகுதியிலுள்ள பாடசாலையை சேர்ந்த சுமார் 52 மாணவர்கள் மற்றும் 11 ஆசிரியர்கள் உள்ளிட்ட குழுவினர் பனிமலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் குறித்த பனிச்சரிவு காரணமாக சுமார் 8 பேர் வரையில் இறந்துள்ளதாகவும், மேலும் பனி சரிவில் புதையுண்ட ஏனையவர்களை மீட்கும் பணி இடம்பெற்றுவருவதாக அந்நாட்டு ஊடகங்களை தகவல் பகிர்ந்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது.