தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற உள்ளதாக நேற்று சனிக்கிழமை (11) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இம்முறையும் இரண்டாவது ஆண்டாக முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்கின்ற நிகழ்வும் இவ்வருடமும் செய்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அதன் ஏற்பாட்டு குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி குறித்த விடயத்தை தெரிவித்திருக்கின்றனர் .
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தங்களுடைய உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்ய விரும்புகின்ற உறவுகள் எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி காலை 7:00 மணி முதல் ஒன்பது முப்பது மணி வரை கப்பல் வீதியிலே உள்ள கடற்கரை பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடத்திலே இந்த பிதிர் கடன்களை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் உறவுகளை கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்காக மக்கள் எந்த ஒரு பொருட்களையும் கொண்டுவர தேவையில்லை எனவும் தாங்கள் தங்களுடைய உயிரிழந்த உறவுகளின் பெயருடன் வருகை தந்து அவரடைய பெயரை கூறி விசேடமாக தமிழ் மொழி மூலமாக அவர்கள் பிதிக்கடன்களை செய்ய உள்ளதாகவும் எனவே கடந்த முறை போன்று தங்களுடைய உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்ய விரும்புகின்ற உறவுகள் எதிர்வரும் மே மாதம் 18ம் தேதி காலை 7:00 மணி முதல் ஒன்பது முப்பது மணி வரை வருகை தந்து தங்களுடைய உறவுகளுக்கான பிதிர்க்கடன்களை செய்வதோடு அன்றைய தினம் பத்து முப்பது மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM