தமிழ்நாடு, தென்காசியில் பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியனின் 85வது பிறந்தநாள் சிறப்புப் போட்டிகள் : வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுக் கிண்ணங்கள்! 

12 May, 2024 | 01:10 PM
image

ந்தியாவின் தமிழ்நாடு, தென்காசி மாவட்டம் / வட்டம், குத்துக்கல்வலசை ஊராட்சி, அய்யாபுரம் கிராமம், தேவிஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோயில் திருமண மண்டபத்தில் மறைந்த பேராசிரியர் மு.பி.பா. அறக்கட்டளை சார்பில் பேராசிரியர் மு.பி.பா. என்றழைக்கப்படும் மு.பி. பாலசுப்பிரமணியனின் 85வது பிறந்தநாளை முன்னிட்டி கடந்த 27.04.2024 மற்றும் 28.04.2024 ஆகிய இரண்டு நாட்கள் பேராசிரியர் மு.பி.பா. நூலகத்தில் நடைபெற்ற 4ஆம் ஆண்டு சிறப்புப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா 10.05.2024 அன்று பேராசிரியர் மு.பி.பா. அறக்கட்டளை அறங்காவலர் மு.பி.பா. இன்பவல்லி  தலைமையில், அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், தற்போதைய தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, குற்றாலம் ராமையா, அய்யாபுரம் மூத்த முன்னோடிகள் மற்றும் நாட்டாமைகள் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. 

இவ்விழாவில் பேராசிரியர் மு.பி.பா. அறக்கட்டளை அறங்காவலர்கள் ச.முத்துக்குமரன், பா.முத்தமிழ்ச்செல்வன், பா.அன்புச்செழியன், இரா.மணிவண்ணன், நெறியாளர்கள் து.இசக்கியம்மாள், பாப்பா லிங்கம், து.இராசசேகரன், முனைவர்.தா.சோபியா ரேச்சல் மேரி, உற்றார், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முன்னாள் முதல்வர், சென்னை பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் மு.பி.பா. என்ற முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன், எம்.ஏ.பி.எச்.டி. 16.05.1939ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம், அய்யாபுரம் கிராமத்தில் பிறந்தார்கள். 

அன்னாரின் பிறந்த நாளையொட்டி அய்யாபுரம் பேராசிரியர் மு.பி.பா. நூலகத்தில் கடந்த 27.04.2024 மற்றும் 28.04.2024 ஆகிய இரண்டு நாட்கள் பள்ளி மாணவர்களுக்கிடையே (மழலையர் (முபு), 1-5 ஆம் வகுப்பு வரை, 6-12 ஆம் வகுப்பு வரை) வண்ணம் தீட்டுதல், வண்ணத்தாள் ஒட்டுதல், ஒலிகளைக் கண்டுபிடித்தல், பலூன் ஊதுதல், எழுத்தை கண்டுபிடித்து கூறுதல், ஓவியம் வரைதல், பொருட்கள் நினைவு கூறுதல், புதிய சொல் உருவாக்குதல், எழுத்து திருத்தம் (தமிழ் / ஆங்கிலம்), சரியான தமிழ் சொல் கண்டுபிடித்தல், புத்தகம் வாசித்தல், திருக்குறள் ஒப்பித்தல், சொற்கள் நினைவுபடுத்திக் கூறுதல், புதிய சொற்றொடர் உருவாக்குதல், அறிவார்ந்த கதை சொல்லுதல், வினாடி வினா, கவிதை எழுதுதல், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, புதிய வார்த்தை கண்டுபிடித்தல், கோலம் வரைதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. 

இப்போட்டிகளில் அய்யாபுரம், குத்துக்கல்வலசை, கொட்டாகுளம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

மேற்கண்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா 10.05.2024 அன்று அய்யாபுரம் தேவிஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோயில் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

இவ்விழாவில், போட்டி ஏற்பாட்டாளர்கள்  சிவபாலா (நூலகர், பேராசிரியர் மு.பி.பா. நூலகம்), முகிலா, சுபாஸ்ரீ ஆகியோருக்கு சிறப்பு பரிசுக் கோப்பையும், சிறப்புப் போட்டிகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுக் கோப்பையும் மற்றும் போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் தட்டு (தாம்பூலம்) பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக, பரிசளிப்பு விழாவில் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பாடல், பேச்சு (தமிழர் பண்பாடு), கவிதை வாசித்தல் (மழைத்துளி உயிர்த்துளி) உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

"வீட்டுக்கு ஒரு புத்தகசாலை தேவை” என்பது அறிஞர் அண்ணாவின் நோக்கு. “ஒரு நூலகம் திறந்தால் ஒரு சிறைச்சாலை மூடப்படும்” என்பது விவேகானந்தர் வாக்கு. “வாசிப்பு மனிதனை முழுமையாக்கும்” என்பது பிரான்சிஸ் பேகனின் கணிப்பு. இதன் அடிப்படையில் பேராசிரியர் மு.பி.பா நூலகம் அவர் பிறந்த ஊரான அய்யாபுரம் கிராமத்தில் 2019ஆம் ஆண்டு திறக்கப்பட்டு, தொடர்ந்து செயற்பட்டு வருகிறது. 

இந்நூலகத்தில் திராவிட இயக்கம், வரலாற்று, இலக்கிய ஆய்வு, கவிதை, நாவல், சிறுகதை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் 6000க்கும் மேற்பட்ட நூல்களும், மேலும், தமிழ்நாடு மற்றும் இந்தியா அளவில் நடைபெறும் சிவில் சர்விஸ் (UPSC), குரூப் தேர்வுகள் (TNPSC), Navy> SSE, வங்கித் தேர்வுகள், RRB, வனத் துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை, உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை பணியிடங்களுக்கு நடைபெறும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும் மற்றும் பள்ளி மாணவர்களின் மருத்துவம் நீட் (NEET), பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்பிற்காக நடைபெறும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கான புத்தகங்களும், தினசரி தமிழ் மற்றும் ஆங்கிலம் நாளிதழ்களும் இடம்பெற்றுள்ளன.

பேராசிரியர் மு.பி.பா. நூலகம் தினமும் காலை 09.30 மணி முதல் - நண்பகல் 01.30 மணி வரை / பிற்பகல் 02.30 மணி முதல் - மாலை 06.30 மணி வரை பொது மக்கள், இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு திறந்திருக்கும். (விடுமுறை: பிரதி வெள்ளிக்கிழமை / அரசு விடுமுறை நாட்கள்)

வெளியீடு: பேராசிரியர் மு.பி.பா. அறக்கட்டளை (பதிவு எண்: 82 / 2019) / நூலகம், அய்யாபுரம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினரால்...

2024-05-25 01:06:56
news-image

குணராஜா நக்கீரன் எழுதிய 'திருக்குறளும் சுக...

2024-05-24 18:23:58
news-image

“ரூபா 2023” புகைப்படப் போட்டியில் திருகோணமலை...

2024-05-24 16:04:53
news-image

வெசாக் பண்டிகை அன்னதானம் 

2024-05-23 18:36:21
news-image

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் தீர்த்தோற்சவம் 

2024-05-23 18:32:55
news-image

உலக சர்வதேச வணிக அமைப்பின் விருது...

2024-05-23 18:00:46
news-image

ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத்தின் 'யாத்திரை' நூல்...

2024-05-23 13:08:45
news-image

திருகோணமலையில் "இலங்கையிலும் அதற்கு அப்பாலும் வரலாறு...

2024-05-22 16:29:56
news-image

சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலய...

2024-05-22 16:15:43
news-image

ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் இடம்பெற்ற...

2024-05-22 16:45:06
news-image

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இரத பவனி 

2024-05-22 18:28:43
news-image

வைகாசி விசாகத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி...

2024-05-22 13:48:38