இந்திய கடற்படையின் நீர்ப்பரப்பு ஆய்வுக்கப்பல் “ ஐ.என்.எஸ். டர்ஷக்“ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் பயிற்சி வழங்கும் நோக்கில் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் நாட்களில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன்பல நட்பு ரீதியான கூடைப்பந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இன்று கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்த “டர்ஷக் ” எதிர்வரும் 30 ஆம் திகதி புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளைஇ “ஐ.என்.எஸ். டர்ஷக்“ தென்பகுதியில் தனது பயிற்சி நடவடிக்கைகளை முடித்துக்கொண்டதன் பின்னர் திருகோணமலைக்கும் தனது விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.