இலங்கையர்களுக்கு ஒலிம்பிக் தகுதிபெற மற்றொரு வாய்ப்பு - ஒசாக்காவில் காலிங்க, நடீஷா, தருஷி போட்டியிடுகின்றனர் !

12 May, 2024 | 11:01 AM
image

(நெவில் அன்தனி)

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கு இலங்கையிலிருந்து இதுவரை எந்தவொரு மெய்வல்லுநரும் இயல்பாக தகுதிபெறாத நிலையில் ஒலிம்பிக் தகுதிக்கான அடைவு மட்டத்தை எட்டி ஒலிம்பிக் தகுதியைப் பெறுவதற்கு 3 மெய்வல்லுநர்கள் கடும் பிரயத்தினம் எடுக்கவுள்ளனர்.

ஜப்பானின் ஒசாக்காவில் அமைந்துள்ள யன்மார் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 11ஆவது கினாமி மிச்சிடக்கா ஞாபகார்த்த மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின் காலிங்க குமாரகே (ஆண்களுக்கான 400 மீட்டர்), நடீஷா ராமநாயக்க (பெண்களுக்கான 400 மீட்டர்), தருஷி கருணாரத்ன (பெண்களுக்கான 800 மீட்டர்) ஆகியோர் பங்குபற்றி ஒலிம்பிக் அடைவு மட்டத்தை அடைய முயற்சிக்க உள்ளனர்.

துபாயில்  அண்மையில்   நடைபெற்ற க்ரோன் ப்றீ மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையிலிருந்து பங்குபற்றிய நால்வரும் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்டத் தவறியிருந்தனர்.

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10.18 செக்கன்களில் ஓடிமுடித்து 3ஆம் இடத்தைப் பெற்ற யுப்புன் அபேகோன், ஒலிம்பிக் அடைவு மட்டமான 10.00 செக்கன்களை தவறவிட்டார்.

பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய நடீஷா ராமநாயக்க அப் போட்டியை 53.82 செக்கன்களில் நிறைவு செய்து  இரண்டாம் இடத்தைப் பெற்றார். ஆனால், அவரும் ஒலிம்பிக் அடைவு மட்டமான 50.95 செக்கன்களைத் தவறவிட்டார்.

பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய தருஷி கருணாரட்ன, அயர்ச்சி காரணமாக போட்டியை நிறைவு செய்யாததுடன் கயன்திகா அபேரத்ன கடைசி இடத்தைப் பெற்றார்.

பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டிக்கான ஒலிம்பிக் அடைவு மட்டம் 1 நிமிடம் 59.30 செக்கன்களாகும்.

ஒசாக்காவில் இன்று நடைபெறவுள்ள மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் காலிங்க குமாரகேயும் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் நடீஷா ராமநாயக்கவும் பங்குபற்றவுள்ளனர்  . பெண்களுக்கான போட்டி இலங்கை நேரப்படி காலை 9.25 மணிக்கும் அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கான போட்டி 9.45 மணிக்கும் நடைபெறும்.

காலை 10.45 மணிக்கு ஆரம்பமாகும் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரட்ன பங்குபற்றவுள்ளார்.

ஒலிம்பிக்கிற்கான தகுதியைப் பெறுவதற்கு ஜூன் மாதம் 30ஆம் திகதிவரை உலக மெய்வல்லுநர்களுக்கு வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் சங்கம்) நிறுவனத்தினால் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் பங்குபற்றவுள்ள ஏனைய போட்டிகள்

மே 19: ஜப்பான் சீக்கோ க்ரோன் ப்றீ (காலிங்க குமாரகே)

மே 20, 21: தாய்லாந்து பாங்கொக் ஆசிய தொடர் ஓட்ட சம்பியன்ஷிப் (5 வகையான தொடர் ஓட்டங்களில் இலங்கை பங்கேற்கும்)

மே 27, 28, 29: சீனா சொங்குயிங் அழைப்பு மெய்வல்லுநர் போட்டி (அருண தர்ஷன, டில்ஹாரி லேக்கம்கே)

ஜூன் 1, 2: தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் (அருண தர்ஷன, தருஷி கருணாரட்ன, நடீஷா ராமநாயக்க, கயன்திகா அபேரத்ன, டில்ஹாரி லேக்கம்கே)

ஜூன் 14, 15, 16: சீனா மொக்போ ஆசிய எரிதல் போட்டி (டில்ஹாரி லேக்கம்கே, சுமேத ரணசிங்க)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12