9 ஆவது தடவை கட்டுமானம், மின்வலு மற்றும் வலுச்சக்திக் காட்சிக்கூடம் ! ஜூலையில் ஆரம்பம் !

11 May, 2024 | 07:10 PM
image

இலங்கையில் கொழும்பு என்னும் இடத்திலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2024 ஜூலை 5ஆம் திகதியிலிருந்து 7 ஆம் திகதி வரை ஒழுங்குசெய்யப்பட்டுள்ள கட்டுமானம், மின்வலு மற்றும் வலுச்சக்தி  காட்சிக்கூடம் - 2024 ஆனது இலங்கையினது அதிகளவு கவனத்திற்குட்பட்ட கட்டுமானம், உள்நாட்டு உற்பத்திப்பொருட்கள்,  மின்சக்தி மற்றும் வலுச்சக்திக்  கண்காட்சியின் மீள்வருகையை அறிவிப்பதில் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் (LECS)  அமைப்பு பெருமிதமடைகிறது.

கட்டுமானம், உள்நாட்டு உற்பத்திப்பொருட்கள், மின்சக்தி மற்றும் வலுச்சக்தி சம்பந்தப்பட்ட துறைகளில் இலங்கையின் முன்னிலைக் கண்காட்சியாக கட்டுமானம், மின்வலு மற்றும் வலுச்சக்திக்  காட்சிக்கூடம் அமைகிறது.

அதனது எட்டாவது தொடர்ச்சியான வருடத்துடன், இந்தக் காட்சிக்கூடமானது கைத்தொழில் பங்கீடுபாட்டாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் கண்காட்சியாளர்கள் அவர்களது உற்பத்திப்பொருட்கள் மற்றும் சேவைகளை வெளிப்படுத்தி, பெறுமதிமிக்க தொடர்புகளை முன்னெடுத்து மற்றும்  கைத்தொழில் புத்தாக்கத்திற்கு  உந்துதலாக விரிவான தளத்தை ஏற்படுத்துகிறது.

காட்சிக்கூடமானது, கண்காட்சியாளர்களுக்கான புதிய வணிக வாய்ப்புகளைத் ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் அடைவை விரிவுபடுத்துவதற்கும், பயன்படுத்தப்படாத சந்தைகளைத்  அணுகுவதற்குமான தளத்தை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட இந்தக் கண்காட்சியானது மின்சக்தி, வலுச்சக்தி, கட்டுமானம், வீடமைப்பு, உட்புற அலங்காரம், கட்டிடம் மற்றும் பொருட்கள் உட்பட பல கைத்தொழில்களை ஒரே இடத்தில் இணைக்கும் பல நிகழ்வுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. கைத்தொழில் வாண்மையாளர்களுக்கு இணையற்ற வலையமைப்பு வாய்ப்புகளை வழங்கும் கட்டுமானம், மின்சக்தி மற்றும் வலுச்சக்தி கண்காட்சிக் கூடம் 2024 இல் 14,000 இற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் 180 இற்கு  மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமானம், மின்வலு மற்றும் வலுச்சக்தி காட்சிக்கூடமானது கட்டுமானம், வீட்டமைப்பு, உட்புற அலங்காரம், மின்வலு மற்றும் வலுச்சக்தித் துறைகளில் வியாபாரங்கள் மற்றும் வாண்மையாளர்களுக்கான முதன்மையான தளமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

அத்துடன், இந்த ஆண்டு நிகழ்ச்சித்தொடர் மேலும் நீண்டதாகவும் சிறந்ததாகவும்  அமையுமென உறுதியளிப்பதுடன் இலங்கையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு உந்துதலாக உள்ள  அண்மைய போக்குகள், தொழில்நுட்பவியல்கள் மற்றும் தீர்வுகளை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையின்  பொருளாதாரச்  செழிப்பில்  மின்சக்தி மற்றும் வலுச்சக்தித் துறை முக்கிய பங்கை வகிக்கிறது. இந்தக் கண்காட்சியானது, புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி மற்றும்  வலுச்சக்தி வினைத்திறனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை எடுத்துக்காட்டும் வகையில் இந்தத் துறையில் வலுவான கவனத்தைக்கொண்டிருக்கும்.

வலுச்சக்தி கலவையில் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியின் பங்கை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் இலட்சிய இலக்குகளுடன், இந்த நிகழ்வானது காற்றாலைகள், சூரிய சக்திக்  கருத்திட்டங்கள் மற்றும் ஏனைய புதுப்பிக்கத்தக்க வலுச்சக்திக்கான  தீர்வுகளில் ஈடுபட்டுள்ள  கம்பனிகளுக்கு உகந்த  தளத்தை  ஏற்படுத்துகிறது. 

கட்டுமானம், மின்சக்தி மற்றும் வலுச்சக்திக் காட்சிக்கூடம்- 2024 ஆனது பரந்த அளவிலான தொழிற் பிரிவுகளுக்கு வசதியளிக்கிறது. கூரைஅமைத்தல் முறைமைகள், கதவுகள் மற்றும் சன்னல்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் தொடக்கம் மின்பொறியியல், புதுப்பிக்கத்தக்க வலுச்சக்திப் பொருட்கள் மற்றும் கட்டுமான உபகரணங்கள் வரை அண்மைய தீர்வுகளைத் தேடும் பார்வையாளர்களுக்கு  இந்தக் காட்சிக்கூடமானது ஒரே இடத்தில்  அமைந்துள்ள வியாபாரத்தலமாகும்.

கட்டிடக் கலைஞர்கள், உடபுற அலங்கார வடிவமைப்பாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், அரசாங்க அதிகாரிகள், கருத்திட்ட முகாமையாளர்கள் மற்றும் பிரதான தீர்மானம்மேற்கொள்பவர்கள் உட்பட பல்வேறு கைத்தொழில் வாண்மையார்களாகிய பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக இந்த நிகழ்ச்சி புகழ்பெற்றுள்ளது. இந்த இணையற்ற  வலையமைப்புச் சுற்றாடலானது  ஒத்துழைப்பை வளர்க்கிறது, வியாபார ஒப்பந்தங்களை எளிதாக்குகிறது மற்றும் பெறுமதிமிக்க சந்தை நுழைபுலத்தைப் பெறுவதற்குக் கம்பனிகளை அனுமதிக்கிறது.

கட்டுமானம், மின்சக்தி மற்றும் வலுச்சக்திக் காட்சிக்கூடம்- 2024 ஆனது கம்பனிகள் அவற்றின் வர்த்தகநாமத் தெரிவுநிலையை மேம்படுத்தவும், இலக்குவைத்த பார்வையாளர்களுடன் இணைக்கவும்  தனித்துவமான வாய்ப்பை ஏற்படுத்துகிறது. பலதரப்பட்ட அனுசரனைப் பொதிகள்  கிடைக்கக்கூடியதாய் இருப்பதுடன், ஊக்குவிப்பு விளம்பரப் பொருட்கள், இணையவழி வழிகாட்டல் மற்றும்  ஏனைய அனுகூலங்கள் அடங்கலான முக்கிய வர்த்தக நாமத்தை  வழங்குகின்றன. 

LECS ஆனது பங்கேற்பாளர்கள் அனைவரினதும் தேவைகள் மற்றும் வரவு- செலவுத் திட்டங்களுக்கு அமைவாகப் பல்நிலை விருப்பத் தெரிவுகளை வழங்குகிறது. ஏற்கனவே கட்டப்பட்ட கட்டமைப்புகளுடன் கூடிய ஷெல் திட்டங்களில் இருந்து வெறுமையான இடங்கள் வரை, கம்பனிகள் அவற்றின் கண்காட்சி இருப்பைத் தனிப்பயனாக்கித் தாக்கத்தை அதிகரிக்க முடியும்.

காட்சிப்படுத்தல்,அனுசரனை வாய்ப்புகள் அல்லது உங்கள் வருகையைப் பதிவுசெய்வது பற்றிய மேலதிக தகவல்களுக்கு, www.constructionexpo.lk ஐப் பார்வையிடவும் அல்லது cpeexpo@saexhibitions.com ஐத் தொடர்புகொள்ளவும்.

இலங்கையின் அதிகளவு ஆற்றல்மிகு கட்டுமான நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பதற்கான  உங்கள் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெல்மேஜ் ஹெல்த்கெயார் மூலம் பல் உட்பொருத்தல்...

2024-06-13 18:52:47
news-image

பூமிக்கு 2,000 மரங்கள் : உலக...

2024-06-13 15:53:57
news-image

கூட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பு...

2024-06-10 17:55:53
news-image

பான் ஏசியா வங்கியுடன் இலங்கையின் தேசிய...

2024-06-04 11:51:48
news-image

Uber Springboard: இலங்கையில் வழிகாட்டல் திட்டத்துடன்...

2024-06-03 16:42:48
news-image

ராணி சந்தனத்திடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு தங்கப் பவுண்கள்

2024-06-03 16:53:26
news-image

LMD இன் மிகவும் விரும்பப்படும் தயாரிப்பு...

2024-06-03 17:13:46
news-image

அளவுத்திருத்த சிறப்பின் ரகசியங்களை திறப்பதற்கான நுழைவாயில்...

2024-05-30 17:29:08
news-image

சுங்கத் திணைக்களத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்...

2024-05-21 17:20:25
news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24
news-image

"IT Gallery - Hikvision Partner...

2024-05-20 17:31:03
news-image

உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும்...

2024-05-20 17:33:11