எதிர்கால வணித் தலைவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஆரம்ப முதலீட்டுத் திட்டமான 'தளிர்' அங்குரார்ப்பணம்!

11 May, 2024 | 07:07 PM
image

( எம்.நியூட்டன்)

முன்னணி தகவல் தொழில்நுட்பக் கம்பனியும், டேவிட் பீரிஸ் குழுமத்தின் துணை நிறுவனமுமான டிபி இன்ஃபோடெக் (பிரைவட்) லிமிடட் (D P Infotech (Private) Limited (DPIN)) நிறுவனம் நாளை திங்கட்கிழமை 06.05.2024 யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி நிலையத்தை  திறந்துவைத்தது

யாழ்ப்பாணத்தின் நகர் பகுதியில் DPMC பிராந்திய அலுவலக வளாகத்தில் இல 61. பலாலி வீதி என்ற முகவரியில் அமைந்துள்ள இந்த அபிவிருத்தி நிலையத்தை டேவிட் பீரிஸ் திருமத்தின் குழுமத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரோஹன திசாநாயக்க  திறந்துவைத்தார்.

திறப்பு விழாவில் கருத்துத் தெரிவித்த......

டேவிட் பீரிஸ் குழுமத்தின் குழுமத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரோஹன திசாநாயக்க

"பாரிய எதிர்பார்ப்புடன் DPIN இன் புதிய அபிவிருத்தி நிலையத்தை நாம் திறந்துவைத்திருப்பதுடன், படைப்பாற்றல் மற்றும் ஒத்துழைப்பை வழங்கும் இடமாக இது அமையும் என்றும், இங்கு தயாரிப்புக்களை உருவாக்கவும், அதன் செயற்பாடுகளில் செழித்தோங்குவதற்கும் எமது பணியாளர்களுக்கு சுதந்திரம் இருக்கும் என்றும் நாம் நம்புகின்றோம். வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இது அமைந்துள்ளது. முற்போக்கான நாட்டை உருவாக்கவும், வளர்ப்பதற்கும் உதவும் வகையில் உள்ளூர் சமூகங்களின் உண்மையான திறனை அடைவதற்கு வாய்ப்புகளை உருவாக்கி அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்" என்றார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொழில் கண்காட்சியில் தீவிரமாகப் பங்களிப்பது மற்றும் டேவிட் பீரிஸ் குழும கம்பனிகளில் சிறந்த தொழில் அனுபவத்தைப் பெறுவதற்காக பல்வேறு துறைகளிலிருந்து குறிப்பிடத்தக்க உள்ளிருப்புப் பயிற்சியாளர்களை உள்வாங்குவது போன்ற செயற்பாடுகளின் ஊடாக நாட்டின் வடபிராந்தியம் தொடர்பில் குழுமத்தின் அர்ப்பணிப்பு புலனாகின்றது.

இதற்கு மேலதிகமாக, தைரியமாக முன்னேறி சிறந்த இடத்தை அடைவதற்கு ஆர்வமாகவிருக்கும் வடபகுதி தொழில்முனைவோருக்கு உதவுவது மற்றும் அவர்களை வளர்த்துவிடுவது என்ற நோக்கத்தில் டேவிட் பீரிஸ் குழுமத்தினால் இயக்கப்படும் 'தளிர்' எனும் ஆரம்ப முதலீட்டுத் திட்டமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. ஒரு வர்த்தகத்திற்கான அல்லது அது பற்றிய திட்டத்திற்கு நிதியளிப்பதில் கவனம் செலுத்தும் அதேநேரம், எதிர்கால தொழில்முனைவோர் எதிர்கால வணிக்கு தலைவர்களாக மிளர்வதற்குத் தேவையான பயிற்சி மற்றும் வழிகாட்டல்களை வழங்கவும் குழுமம் விரும்புகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் பொறியியல் பீடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் திறமையானவர்கள் அங்கீகரிக்கப்பட்டு, கௌரவிக்கப்படவுள்ளனர். இது நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டத்தின் முதலாவது தொகுதியாகும்.

டேவிட் பீரிஸ் குழுமம் இலங்கையில் உள்ள மிகப் பெரியதும், நிதி ரீதியில் ஸ்திரத்தன்மை கொண்ட கூட்டாண்மை நிறுவனங்களில் ஒன்றாகும். குழுமமானது வாகன உற்பத்தி மற்றும் சேவை, நிதிச் சேவை, சரக்குப் போக்குவரத்து மற்றும் களஞ்சிய செயற்பாடு, பந்தயம் மற்றும் பொழுதுபோக்கு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிலநுடபங்கள், ஆதன முதலீடு, நுகர்வோர்

சாதனங்கள், ஷிப்பிங் மற்றும் கரையோர சேவைகள், சூரிய சக்தி போன்ற பரந்துபட்ட துறை வணிகங்களில் அக்கறை கொண்டுள்ளது. குழுமத்தின் தொழில்நுட்ப ரீதியான விடயங்களைத் திர்ப்பவராக டிபி இன்ஃபோடெக் (பிரைவட்) லிமிடட் நிறுவனம் காணப்படுகின்றது. இந்நிறுவனம், டிஜிட்டல் மயப்படுத்தல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப செயலிகள் உள்ளிட்ட புத்தாக்கமான தீர்வுகளின் ஊடான டிஜிட்டல் மாற்றங்கள், தள அபிவிருத்தி, சைபர் பாதுகாப்புத் தீர்வுகள், பாதுகாப்பு செயற்பாட்டு நிலையம், மென்பொருள் தயாரிப்பு மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் போன்றவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓய்வூதியம் பெறுவோருக்கான டிஜிட்டல் முறையிலான புகையிரத...

2025-03-26 11:21:11
news-image

பாதெனிய, ஸ்ரீ சுனந்த மகா வித்தியாலயத்தில்...

2025-03-26 14:11:15
news-image

ஆறாவது தடவையாக 2025ஆம் ஆண்டுக்கான 'School...

2025-03-25 18:01:02
news-image

முடிவடைந்த ஆண்டுக்கான இலாபத்தை ரூ.1,150 மில்லியனாக...

2025-03-25 15:13:59
news-image

SLISB மறுசீரமைப்பு இழப்பான 45 பில்லியன்...

2025-03-25 14:26:31
news-image

2024 தேசிய விற்பனை விருது வழங்கும்...

2025-03-25 12:37:59
news-image

Prime Group வீட்டு உரிமையாண்மை மற்றும்...

2025-03-24 20:22:43
news-image

அபேக்ஷா மருத்துவமனையின் இளம் நோயாளிகளுக்கான செலான்...

2025-03-20 11:03:29
news-image

ACCA Srilanka Awards 24 விருதுகள்...

2025-03-20 10:45:24
news-image

Tata Motors, DIMO உடன் இணைந்து,...

2025-03-19 09:47:50
news-image

மக்கள் வங்கி ஒருங்கிணைந்த மொத்த வருமானமாக...

2025-03-18 11:55:47
news-image

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் சுபபெத்தும்...

2025-03-18 11:42:58