(எம்.மனோசித்ரா)
நாட்டிலுள்ள பிரதான கட்சிகள் பலவும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியைக் கண்டு அஞ்சுகின்றன. எனவே, அவை அனைத்தும் ஒன்றிணைந்து சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால் எந்தவொரு சதித்திட்டத்துக்கும் மக்கள் ஏமாறப் போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை (11) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இவ்வாண்டிறுதியில் பொது மக்கள் யுகம் உருவாகும். எம்மைப் பற்றி சிந்தித்து அனைவரும் அச்சமடைந்துள்ளனர். மொட்டு, யானை, திசைக்காட்சி என அனைவரும் எம்மைக் கண்டு அஞ்சுவதால் அவர்கள் அனைவரும் இணைந்து எமக்கெதிராக சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றனர். எந்தவொரு சதித்திட்டத்தாலும் 220 இலட்சம் மக்களை ஏமாற்ற முடியாது.
அதிகாரம் எதுவுமின்றி பல சேவைகளை நாட்டுக்கு செய்யும் ஒரேயொரு எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே. அதே போன்று தற்போது வழங்கும் சகல வாக்குறுதிகளையும் எமது ஆட்சியில் நிச்சயம் நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கின்றேன். புதிய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தை அடுத்த மட்டத்துக்கு எடுத்துச் செல்வோம்.
விவசாயிகளின் பயிர்செய்கைக்கான ஸ்திர விலை நிர்ணயிக்கப்படும். அதேபோன்று விவசாயிகளுக்கான ஓய்வூதிய முறைமையையும் நாம் மறக்கவில்லை. இவ்வாண்டிறுதிக்குள் விவசாயிகளுக்கான ஓய்வூதிய முறைமையை நடைமுறைப்படுத்துவோம். யானை - மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும். விவசாயிகளின் விவசாய நிலத்துக்கான உரிமம் வழங்கப்படும்.
சஜித் பிரேமதாச எந்தவொரு நாட்டுக்கும் அடிபணிய மாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே போன்று வர்த்தக நிறுவனங்களால் என்னை விலைக்கு வாங்கவும் முடியாது. எமது மக்களின் உரிமைகளைப் பாதுகாத்துக்கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM