(நெவில் அன்தனி)
பங்களாதேஷில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றின் சிறப்பு தூதுவர் முன்னாள் பாகிஸ்தான் மகளிர் அணித் தலைவி சானா மிர் கூறுகிறார்.
மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக இருந்த இலங்கையின் ஆற்றல்களால் சானா மிர் மிகவும் கவரப்பட்டுள்ளார்.
தகுதிகாண் சுற்றில் 7 போட்டிகளிலும் வெற்றியீட்டிய இலங்கை மகளிர் அணி சாதிக்கவல்லது என சானா மிர் நம்புகிறார்.
'சமரி அத்தபத்துவின் அசாத்திய ஆற்றல் வெளிப்பாட்டின் பலனாக இலங்கை தொடர்ச்சியாக வெற்றிபெற்று வந்துள்ளது' என்றார் அவர்.
'தென் ஆபிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர் வெற்றிகள், ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் ஈட்டிய வெற்றிகள் என்பன, பங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னர் இலங்கையை சிறந்த நிலையில் இட்டுள்ளது' என அவர் மேலும் கூறினார.
இலங்கை மகளிர் அணியின் முதுகெலும்பாகத் திகழும் சமரி அத்தபத்து, உலகக் கிண்ணப் போட்டியில் பிரகாசிப்பாரேயானால் இலங்கைக்கு அதிர்ஷ்டம் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட், மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் ஆகியவற்றில் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்றுள்ளவர் சமரி அத்தபத்து ஆவார். தகுதிகாண் சுற்றின் இறுதிப் போட்டியில் அவர் சதம் குவித்து அசத்தியிருந்தார்.
'அவுஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளைக் கொண்ட கடினமான ஏ குழுவில் இலங்கை இடம்பெறுகின்றபோதிலும் அவ்வணியினால் எதிர்பாராத முடிவுகளை ஏற்படுத்தக்கூடிய திறமை இருக்கிறது. பங்களாதேஷில் அத்தபத்து திறமையை வெளிப்படுத்தினால் கிரிக்கெட்டை பின்பற்றும் பலர் ஆச்சரியம் அடைவதுடன் அரை இறுதிவரை இலங்கை முன்னேறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது' என்றார் சானா மிர்.
ஐசிசி மகளிர் தகதிகாண் சுற்றில் சமரி அத்தபத்து ஒரு சதம், ஒரு அரைச் சதம் உட்பட 226 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார். இம்முறை தகுதிகாண் சுற்றில் தனி ஒருவர் பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.
அவரை விட விஷ்மி குணரட்ன (ஒரு அரைச் சதம் உட்பட 189 ஓட்டங்கள்), நிலக்ஷிகா சில்வா (97 ஓட்டங்கள்), ஹாசினி பெரேரா (74 ஓட்டங்கள்) ஆகியோர் துடுப்பாட்டத்தில் வெகுவாக முன்னேறியுள்ளனர்.
பந்துவீச்சில் இனோஷி ப்ரியதர்ஷனி (8 விக்கெட்கள்), கவிஷா டில்ஹாரி (8), சமரி அத்தபத்து (7), உதேஷிகா ப்ரபோதனி (7 விக்கெட்கள்), சுகந்திகா குமாரி (4 விக்கெட்கள்) ஆகியோர் இலங்கைக்கு பெரும் பங்காற்றியிருந்தனர்.
அடுத்துவரும் போட்டிகள்
பங்களாதேஷில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக இலங்கை 3 முக்கிய ரி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர், மகளிர் ரி20 ஆசிய கிண்ணம், அயர்லாந்துக்கு எதிரான மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் இலங்கை விளையாடவுள்ளது.
இந்த தொடர்களில் திறமையை வெளிப்படுத்தி வெற்றிகளை சம்பாதிக்க உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து உலகக் கிண்ணத்தில் போட்டிக்கு போட்டி சிறந்த திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்து வெற்றிபெறுவதே எமது குறிக்கோள் எனவும் சமரி அத்தபத்து தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM