களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் டீ 56 ரக துப்பாக்கி மற்றும் 40 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தரமுல்ல - தலங்கம பகுதியில் உள்ள கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான “பண்டி” யின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.