எம்மில் சிலரை சந்திக்கும் போது அவர்கள் வித்தியாசமான உடல் மொழியுடன் எம்முடன் உரையாடுவதை கண்டிருப்போம். உதாரணமாக கை, கால், முக தசைகளை அவர்களுடைய கட்டுப்பாடு இன்றி தன்னிச்சையாக ஒழுங்கற்ற முறையில் இயக்கிக் கொண்டிருப்பர். இது அவர்களுக்கும் அவர்களுடன் உரையாடி கொண்டிருக்கும் எமக்கும் தர்ம சங்கடமான அல்லது விரும்பத்தகாத சூழலை உருவாக்கும். இதுபோல் அவதானிக்க இயலாத.. தன்னிச்சையான தசை இயக்க பாதிப்பை மருத்துவ மொழியில் 'கொரியா - Chorea என குறிப்பிடுகிறார்கள். இத்தகைய பாதிப்பிற்கு தற்போது நவீன சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணத்தை பெற இயலும் என நரம்பியல் துறை வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆண், பெண் என இரு பாலாரும் வயது வித்தியாசமின்றி இந்த வகையான தன்னிச்சையான தசை இயக்க பாதிப்பிற்கு முகம் கொடுக்க கூடும். சிலர் இத்தகைய பாதிப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை உணராமலும் இருக்கக்கூடும். இதனை ஆங்கிலத்தில் மூவ்மெண்ட் டிஸ்ஸார்டர் என்றும் குறிப்பிடுவர். இத்தகைய பாதிப்பு Trunkal chorea, Limb Chorea, Facial Chorea என பாதிப்பு ஏற்படும் இடத்தை பொருத்தும் குறிப்பிடுவார்கள். சுருக்கமாக விவரிக்க வேண்டும் என்றால், நாம் விரும்பும் வகையில் அல்லாது.. கட்டுப்படுத்த இயலாத வகையில் உடல் இயக்கத்தை தசைகள் மேற்கொண்டால், அத்தகைய நிலையை தான் 'கொரியா - தன்னிச்சையான தசை இயக்க பாதிப்பு' என குறிப்பிடலாம்.
மூளையில் ஏற்படும் பாதிப்பின் காரணமாகவே இத்தகைய அறிகுறிகள் தோன்றுகிறது. சிலருக்கு பாரம்பரிய மரபணு குறைபாட்டின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். ரூமாட்டிக் காய்ச்சல் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு இளம் பெண்களிடத்தில் ஏற்படுகிறது. வலி நிவாரணிக்காக எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். மூளைக்காய்ச்சல், பக்கவாதம் போன்ற காரணங்களாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
ஒரு பொருளை இறுக பற்றி இருக்கும்போது அதனுடைய பிடிமானம் உறுதியற்ற நிலையில் தளர்ச்சி அடைவது, பேச்சில் குளறுபடி, தலைவலி, முகம், கை, கால் போன்றவற்றில் உள்ள தசைகளை நீங்கள் விரும்பிய படி இயக்குவதில் தடை.. போன்றவை இதன் அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டவுடன் அருகில் உள்ள நரம்பியல் சிகிச்சை அளிக்கும் வைத்தியரிடம் சென்று அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க வேண்டும்.
இதன் போது வைத்தியர்கள் நரம்பு மண்டலத்தின் செயல் திறன் குறித்த பிரத்யேக பரிசோதனையை மேற்கொள்வர். இதனைத் தொடர்ந்து ரத்த சர்க்கரை அளவு, குருதி அழுத்த அளவு போன்ற பரிசோதனைகளையும் மேற்கொள்ள பரிந்துரைப்பர். பிறகு நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் வழங்குவர். மருந்தியல் சிகிச்சைகளின் மூலம் கட்டுப்படுத்த இயலாத கொரியா பாதிப்பை டீப் பிரைன் ஸ்டிமுலேஷன் எனும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் தருவர். இத்தகைய பாதிப்பை தூண்டும் காரணிகளான மன அழுத்தம், பயம், பதட்டம் ஆகியவற்றை களைவதற்காக வாழ்க்கை நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான பரிந்துரையை வைத்தியர்கள் வழங்குவர். அதனை உறுதியாக கடைப்பிடித்தால் இத்தகைய பாதிப்பை மீண்டும் வராமல் தற்காத்துக் கொள்ளலாம்.
- வைத்தியர் கார்த்திகேயன்
தொகுப்பு : அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM