எம்மில் பலரும் ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, கண்டகச் சனி, அர்த்தாஷ்டம சனி என சனியை பார்த்து அச்சப்படுபவர்கள் தான் அதிகம். இவரைத் தொடர்ந்து எம்மில் பலரும் ராகு மற்றும் கேதுவின் தோஷங்களுக்கும் பயப்படுகிறார்கள். ஏனெனில் சனி தோஷம் என்பது மிக மிக மெதுவாகவே ஜாதகரைப் பாதிக்கிறது என்றும். ஆனால் ராகுவும், கேதுவும் பெயர்ச்சியான உடனே தங்களின் பார்வையை ஜாதகர் மேல் செலுத்துகிறார்கள்.
இதனால் ஜாதகர்களுக்கு ராகு -கேது தோஷம் என்றாலும் பாரிய அளவில் அச்சப்படுகிறார்கள். இந்த தருணத்தில் சாயா கிரகங்களில் ஒன்றாக திகழும் கேது பகவான் உங்களது ஜாதகத்தில் தோஷத்தை ஏற்படுத்தினால்..., அதனை நிவர்த்தி செய்ய எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் அற்புதமான பலனளிக்கும் எளிய பரிகாரத்தை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள் : எள், கொள்ளு, ஏழு வண்ண பட்டாடைகள், வெற்றிலை, பாக்கு , தட்சணை பணம்.
உங்கள் வீட்டிற்கு அருகே உள்ள ஆலயத்தில் இருக்கும் நவகிரகங்களை வணங்கி, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்களை எடுத்துச் சென்று நவகிரக சன்னதியில் எள்ளையும், கொள்ளுவையும் சம அளவில் எடுத்துக்கொண்டு அதனை நன்றாக கலந்து, அதன் மீது ஏழு பட்டாடைகளை வைத்து, அதன் மீது வெற்றிலை பாக்கு தட்சனை ரூபாயை... என இவை அனைத்தையும் வைத்து கேது பகவானை மனதுக்குள் பிரார்த்தித்து, 'இன்று முதல் எம்மை பீடித்திருக்கும் கேதுவின் தோஷம் நிவர்த்தி அடைந்து, கேது பகவானால் சுப பலன்களை அடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டு, மேற்கூறிய பொருளை ஏழை எளிய மக்களில் ஒருவரை தெரிவு செய்து அவருக்கு தானமாக வழங்கிட வேண்டும். இதனை ஒரு முறை செய்தால் போதுமானது.
இதன் பிறகு நீங்கள் வழக்கம் போல் உங்களுடைய நாளாந்த பணிகளில் கவனம் செலுத்தி பணியாற்ற தொடங்கினால்... கேது பகவானால் தடைப்பட்டிருந்த பல காரியங்கள் தற்போது விரைவாக நிறைவேறுவதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM