ஸ்டார் - விமர்சனம்
தயாரிப்பு : ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா & ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட்
நடிகர்கள் : கவின், பிரீத்தி முகுந்தன், அதிதி பொஹங்கர், லால், கீதா கைலாசம், மாறன் மற்றும் பலர்.
இயக்கம் : இளன்
மதிப்பீடு : 3/5
'டாடா' படத்தின் வெற்றிக்குப் பிறகு கவினும், 'பியார் பிரேமா காதல்' படத்தின் வெற்றிக்குப் பிறகு அதற்கு இயக்குநர் இளனும் இணைந்து பணியாற்றி இருக்கும் 'ஸ்டார்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பட மாளிகைகளில் வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
சிறு வயது முதலே நடிப்பின் மீது அதீத பற்று கொண்ட எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன்... நடிப்பில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்கிறான். நீண்ட காத்திருப்புக்குப் பின் அவனுக்கு வாய்ப்பு கிடைக்கும் தருணத்தில் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்குகிறான். அதிலிருந்து மீண்டு.. அவன் சினிமாவில் ஸ்டாராக ஜொலித்தானா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
இந்த படத்தின் கதையில் நாயகனுக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதால்.. அவருடைய பெற்றோர்கள்,' நடிகனுக்கு முகம் தான் முக்கியம்' என்பதை வலிமையாக மனதில் விதைக்கின்றனர். ஒரு புள்ளியில் நடிகனாக தன்னை தகுதிப்படுத்திக் கொண்டு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தயாராகும் தருணத்தில் எதிர்பாராத விபத்தில் சிக்கி அவனது முகம் சேதமடைகிறது. முகத்தில் பாதிப்பு ஏற்பட்டவுடன் தன்னுடைய லட்சியம் சீர்குலைந்து விட்டதாக மனதளவில் பாதிக்கப்படுகிறான். அவனால் மற்றவர்களைப் போல் இயல்பானவராகவும் வாழ முடியாமல், நடிகனுகாகு தேவையான அதீத தன்னம்பிக்கையும் இல்லாமல் உளவியல் சிக்கலை எதிர்கொள்கிறான். இதிலிருந்து அவன் எந்த உந்துதலில் முன்னோக்கி நகர்கிறார் என்பதை இப்படத்தின் உச்சகட்ட காட்சியில் இயக்குநர் விவரித்த விதம் பாராட்டுக்குரியது.
பாடசாலையில் பயிலும் மாணவனாக ...
கல்லூரி மாணவனாக... இளைஞனாக.. அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியராக.. நடிகராக... என நடிகர் கவின் பல தோற்றத்தில் திரையில் தோன்றி தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்கிறார்.
நடிகனாக வேண்டும் என்ற கவினின் ஆசைக்கு அச்சாரம் போடுவதுடன் அவனை மனதளவிலும், உடலளவிலும் தயார்படுத்தும் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லாலின் நடிப்பும் ரசிகர்களை கவர்கிறது.
ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அதிதி பொஹங்கர் என இரண்டு நாயகிகள். முதலாமவரை கவின் காதலிக்க, இரண்டாமவர் கவினை காதலிக்க.. இருவருமே சராசரிக்கு மேல் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.
நடிகர் சுகுமார்- திரையில் தோன்றும் காட்சி ஒரு நடிகனுக்கு வாய்ப்புகள் குவியும் போது இந்த சமூகம் அளிக்கும் மரியாதையும், வாய்ப்புகள் இல்லாத போது வழங்கும் அவமரியாதையையும் அதன் போக்கில் எடுத்துக்காட்டிருப்பது நேர்த்தியாக இருக்கிறது.
படத்தின் கதை 90 களில் தொடங்கி ஒரு தசாப்தத்திற்கு மேல் நீடிக்கிறது. இதன் போதான நிலவியல் பின்னணிகளும் , அந்த காலகட்டத்தில் மக்களிடத்தில் புழக்கத்தில் இருந்த இலத்தரனியல் சாதனங்களின் வகைகள், வடிவங்கள் என கலை இயக்கம் நுட்பமாக கையாளப்பட்டு ரசிகர்களை பரவசப்படுத்துகிறது.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணியிசையும், பாடல்களும். நடிகர்களை விட கதையை வலிமையாக்குகிறது.
கதாநாயகனாக நடிக்க போராடும் ஒரு நடிகனுக்கு.. குணச்சித்திர நடிகனாக போராடும் நடிகனின் போராட்டத்தை போல் அவருடைய கதாபாத்திரத்தை எழுதியிருப்பது திரைக்கதையில் தொய்வை ஏற்படுத்துகிறது.
கல்லூரி விழாவில் பெண் வேடமிட்டு கவின் பேசும் வசனங்கள் இளம்பெண்களின் பாராட்டை பெற்றிருக்கிறது. இந்த இடத்தில் வசனத்தை எழுதியிருக்கும் வசனகர்த்தாவும் பாராட்டைப் பெறுகிறார்.
நடிகனாக வேண்டும் என்று நினைக்கும் கவின், அவனுடைய குடும்பம், அவனுடைய காதல், அவனுடைய மனைவி.. என திரைக்கதை குடும்ப கதையாகவே பயணிக்கிறது. நடிகனாக வேண்டும் எனும் இலட்சியத்திற்காக கவின் கதாபாத்திரம் அழுத்தமாக போராடாதது ஏன்? என்ற வினாவையும் எழுப்புகிறது. மேலும் ஸ்டாராக ஜொலிக்க வேண்டும் என்பதற்கான கவினின் முயற்சியில் ஆழமில்லை. அழுத்தமில்லை.
முன்னணி நடிகர் ஒருவர் மற்றும் முன்னணி இயக்குநர் ஒருவர் கௌரவ வேடத்தில் தோன்றி நடித்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.
ஒளிப்பதிவு, பின்னணி இசை, கலை இயக்கம், படத்தொகுப்பு என தொழில் நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு படத்திற்கு பலம் என சொல்லலாம்.
காமெடி, கவர்ச்சி நடனம், சண்டைக்காட்சி போன்ற கமர்சியல் அம்சங்கள் இல்லை என்றாலும்.. முகம் சுழிக்க கூடிய அருவருப்பான காட்சிகள் இடம்பெறாததால் இந்த கோடை விடுமுறையில் இந்த ஸ்டாரை பட மாளிகைக்கு குடும்பத்தினருடன் சென்று கண்டு ரசிக்கலாம்.
ஸ்டார் - மீசையில்லாத பாரதி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM