காரிய சித்தியை அள்ளித்தரும் முருகன் வழிபாடு!

11 May, 2024 | 01:08 PM
image

எம்மில் பலரும் தங்களுடைய கஷ்டங்களை தீர்க்க எப்போதும் எளிய முறையிலான பரிகாரத்தை தான் மேற்கொள்ள விரும்புவர்.

ஏனெனில் முழு நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் எளிமையான பரிகாரம் எப்போதும் வலிமையானது. உடனடியாக பலனை தருவது.

எளிய பரிகாரம் என்பதற்காக அதனை கவன சிதறலுடன் மேற்கொண்டால் பலன்கள் கிடைப்பது கடினம். அதே தருணத்தில் நம்முடைய கஷ்டங்களை முருக பெருமான் தீர்த்து வைப்பார் என்று முழு மனதுடன் நம்பிக்கை வைத்து அவரை பிரத்யேகமான முறையில் வழிபட்டால் அருள் புரிவார்.

உடனே எம்மில் சிலர் அது என்ன பிரத்யேகமான வழிமுறை? என கேள்வி எழுப்பவர். அருகில் உள்ள சிவாலயத்திற்கோ அல்லது முருகன் ஆலயத்திற்கோ சென்று அங்கு வள்ளி தெய்வானை சமேதரராக இருக்கும் முருகன் சன்னதிக்கு வருகை தர வேண்டும். அதற்கு முன்னதாக உங்களுடைய பிரச்சனையை இறைவன் முன் சமர்ப்பிப்பதற்காக ஒரு வெள்ளை தாளில் எழுதி, அதனை நான்காக மடித்து உங்களுடைய சட்டை பையில் வைத்துக் கொள்ளுங்கள். 

முருகனை வணங்குவதற்காக செவ்வரளி பூவினை எடுத்துக் கொள்ளுங்கள். வள்ளி தெய்வானை சமேத முருகனை தரிசித்து அவருக்கு செவ்வரளி பூவைச் சாற்றி உங்களது பிரார்த்தனையை அவர் காலடியில் சமர்ப்பணம் செய்யுங்கள். அதனைத் தொடர்ந்து முருக பெருமான் சன்னதியை எட்டு முறை வலம் இடமாக சுற்றி வாருங்கள். நீங்கள் பிரதட்சணம் தொடங்கும் தருணத்தில் உங்களுடைய மனதில் 'ஓம் நமோ சரவணபவ' எனும் மந்திரத்தை இயல்பான தொனியில் தொடர்ச்சியாக உச்சரித்துக் கொண்டே  வாருங்கள்.

 எட்டு சுற்றுகள் நிறைவடைந்தவுடன் ஒன்பதாவது சுற்றினைத் தொடங்கும் போது அதனை அடி பிரதட்சணம் என்ற வகையில் வள்ளி தெய்வானை சமேத  முருகன் சன்னதியை வலமிருந்து இடமாக சுற்றி வாருங்கள். அதன் பிறகு முருகப்பெருமானிடம் உங்களது கோரிக்கையை சமர்ப்பித்து விட்டு 'இதனை நிறைவேற்றித் தாருங்கள் இறைவா..!' என மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்..

இதனை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்று காலை வேளையில் தொடர்ச்சியாக ஒன்பது வாரங்களுக்கு செய்து வாருங்கள்.

ஒன்பதாவது வாரம் உங்களது பிரார்த்தனையை நிறைவு செய்யும் போது மூன்று ரோஜா பூ மாலையை வாங்கிச் சென்று வள்ளி- தெய்வானை - முருகனுக்கு சாற்றி உங்களது கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு பணிவுடன் மீண்டும் சமர்ப்பணம் செய்யுங்கள்.

உங்களது கோரிக்கை நீங்கள் பிரார்த்திக்க தொடங்கும் ஒன்பது வாரங்களுக்குள்ளாகவே நிறைவேறுவதை அனுபவத்தில் காணலாம்.

வேறு சிலருக்கு அவர்களின் கோரிக்கை ஒன்பது வாரம் நிறைவடைந்த பிறகு ஓரிரு வாரங்களில் நிறைவேறுவதை காணலாம். 'ஓம் நமோ சரவணபவ' எனும் மந்திரத்திற்கு தனி வல்லமை உண்டு. இந்த மந்திரத்தை உங்களுடைய பிரார்த்தனை தருணங்களில் மட்டும் 108 முறைக்கு மேல் உச்சரித்தால் பலன் கிடைப்பதை அனுபவத்தில் உணரலாம்.

முருகப்பெருமான் ஆலயத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகனை மேலே கூறியபடி வலம் வந்து அடி பிரதட்சணம் செய்து ஓம் நமோ சரவணபவ என்ற மந்திரத்தை உச்சரித்து உங்களது கோரிக்கையை சமர்ப்பித்தால். ..அது நிறைவேறும் என்பது உறுதி.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவகிரக தோஷங்களை நீக்கும் குளியல் பரிகாரம்..!

2024-06-20 19:53:01
news-image

நினைத்ததை நடத்திக் காட்டும் நாமாவளி பரிகாரம்..!

2024-06-19 20:20:49
news-image

வெற்றிகளை அள்ளி வழங்கும் அரச மர...

2024-06-18 17:35:24
news-image

வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த பொங்கலுக்கான...

2024-06-18 16:31:12
news-image

வெற்றியை அள்ளித்தரும் பாராயண பரிகாரம்...!

2024-06-17 20:42:41
news-image

அரசாங்க வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான எளிய...

2024-06-15 14:04:38
news-image

பண வசியத்திற்கும், மன அமைதிக்கும் இரண்டு...

2024-06-14 16:35:06
news-image

கடன் பிரச்சனை தீர்வதற்கான எளியதான பரிகாரங்கள்..!

2024-06-13 15:52:06
news-image

நினைத்ததை நடத்தி வைக்கும் ஏலக்காய் தீப...

2024-06-12 15:14:53
news-image

நோயை குணப்படுத்தும் எளிய பரிகாரம்...!?

2024-06-11 19:02:13
news-image

சர்வ அருளை வழங்கும் சரள யோகம்

2024-06-10 21:27:26
news-image

புண்ணியத்தை அருளும் ஸ்ரீ நாக யோகம்!

2024-06-08 16:47:15