தொப்புளில் ஏற்படும் தொற்று பாதிப்பிற்குரிய சிகிச்சை!

11 May, 2024 | 01:07 PM
image

கோடை காலத்தில் உடலின் பல பகுதிகளிலிருந்து வியர்வை வெளியேறும். இத்தகைய தருணங்களில் வியர்வை எம்முடைய தொப்புள் பகுதிக்கும் பயணித்து, அங்கு இயல்பாக இருக்க வேண்டிய ஈர பதத்தை விட கூடுதலான ஈர பதத்தை ஏற்படுத்துவதால்.. பாக்டீரியா, பூஞ்சை காளான் போன்ற தொற்றுகள் ஏற்பட்டு, அசௌகரியத்தை உண்டாக்குகிறது. இதனை உரிய காலத்தில் கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்று முழுமையான நிவாரணத்தை பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

பாதிக்கப்பட்ட தொப்புள் பகுதியிலிருந்து திரவ கசிவு, அப்பகுதியில் தடித்திருத்தல் அல்லது சிவந்திருத்தல், அரிப்பு, துர்நாற்றம், நீர்க்கட்டி, வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுடைய தொப்புள் பகுதியில் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என உணர்ந்து உடனடியாக வைத்தியரை சந்தித்து சிகிச்சையும், ஆலோசனையும் பெற வேண்டும்.

பாக்டீரியாம மற்றும் பூஞ்சை காளான் தொற்று போன்றவற்றால் இத்தகைய பாதிப்பு உண்டாகிறது. மேலும் தொப்புள் பகுதியில் சுகாதாரத்தை தூய்மையாக பேணவில்லை என்றாலும் இத்தகைய பாதிப்பு அதிகரிக்கக்கூடும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தகைய தொப்புள் தொற்று நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்பதால் அவர்கள் சுகாதாரத்தை தீவிரமாக பராமரிக்க வேண்டும்.

தோல் பரிசோதனை, ரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்த பிறகு சிகிச்சைகளை தொடர்வர். இதன்போது நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்துகள் சிகிச்சைகள், கிறீம்கள், களிம்புகள், ஒயின்மென்ட் போன்றவற்றின் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். சிகிச்சையின் போதும்... சிகிச்சைக்கு பின்னரும்... வைத்தியர்களின் அறிவுரையை முழுமையாக கடைப்பிடித்தால் அப்பகுதியில் மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

வைத்தியர் தீப்தி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மெனிங்கியோமா எனும் மூளையில் வளரும் கட்டி...

2024-05-24 17:46:17
news-image

வயிற்றில் நீர் கோர்ப்பு எனும் பாதிப்பிற்கு...

2024-05-23 16:37:56
news-image

இரத்த வாந்தி எனும் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2024-05-22 15:58:35
news-image

மஞ்சள் காமாலை பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-05-21 17:47:40
news-image

கல்லீரல் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-05-20 17:31:58
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு மரபணு பரிசோதனை அவசியமா.?

2024-05-18 18:08:06
news-image

கில்லன் - பாரே சிண்ட்ரோம் எனும்...

2024-05-17 18:20:50
news-image

இலங்கையில் அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்த...

2024-05-17 15:51:49
news-image

முதுகு தண்டுவடப் பகுதியில் ஏற்படும் நரம்புகளின்...

2024-05-16 17:36:07
news-image

சுருள் சிரை நரம்பு பாதிப்பிற்கு நிவாரணம்...

2024-05-14 20:55:21
news-image

உணவு குழாய் இயக்க பாதிப்பை துல்லியமாக...

2024-05-13 17:42:00
news-image

'கொரியா' தசை இயக்கப் பாதிப்பை கட்டுப்படுத்தும்...

2024-05-11 18:10:10