பற்றரி மூலம் இயங்கும் விளையாட்டுப் பொருட்களால் சிறுவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுப் பொருட்களில் லித்தியம், சில்வர் ஒக்சைட் மற்றும் அல்கலைன் ஆகிய இரசாயன கலவைகள் கலந்த பொத்தான் வடிவில் பற்றரிகள் இருப்பதால் அதனை சிறுவர்கள் விழுங்கலாம், அல்லது காது மற்றும் மூக்கில் வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்றார்.
சிறுவர்கள் பற்றரிகளை விழுங்கினால் மின் இரசாயனச் செயல்பாடுகளால் உயிராபத்து ஏற்படும்.
காரணம், எமது உணவுக் கால்வாயின் (உணவுக்குழாய்) முதல் பகுதி இயற்கையாகவே குறுகியதாக இருப்பதால், பற்றரியை விழுங்கும்போது வயிற்றுக்குள் சென்று கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
இதனால் பற்றரி வயிற்றில் திடீரென வெடிக்கலாம், இதனால் சுவாசக் குழாய் அடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படும்.
எனவே, சிறுவர்கள் இவ்வாறான விபத்துக்களில் சிக்கினால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும். முதலுதவியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வரை 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இரண்டு தேக்கரண்டி சுத்தமான தேனை பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM