இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 10 கோடி ரூபா பெறுமதியான தங்கதுடன் ஒருவர் கைது..!

Published By: Selva Loges

27 Mar, 2017 | 12:10 PM
image

இலங்கையிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் சுமார் 10 கோடி பெறுமதியான, 16.5 கிலோ தங்க கட்டிகளை கொண்டு சென்ற ஒருவரை, தமிழக பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

இலங்கையிலிருந்து கடல் வழியாக தங்க கட்டிகள் ராமநாதபுரத்துக்கு கடத்தப்பட்டு, அங்கிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவது தொடர்பாக அந்நாட்டு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்தே, 16.5 கிலோ தங்க கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தமிழக மத்திய புலனாய்வு பிரிவினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள்இணைந்து இராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் மற்றும் கிழக்கு கடற்கரைசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனைகளை நடத்திய நிலையில், கொரியர் வண்டியில் பதுக்கப்பட்டிருந்த சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான தங்க கட்டிகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.  

இந்நிலையில் கடத்தல் தங்கம் யாருக்கு கொண்டு செல்லப்பட்டது மற்றும் குறித்த கடத்தல் பின்னணியில் இருப்பவர்கள் தொடர்பில், இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோட்டார் சைக்கிள் - பவுசர் மோதி...

2025-03-26 14:10:34
news-image

ஊடக மாற்றங்களுக்கு அரசாங்கம் பொறுப்பாளியாக இருக்க...

2025-03-26 14:08:21
news-image

வெலிக்கடையில் வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு கைப்பற்றல்

2025-03-26 13:27:41
news-image

சிவஸ்ரீ தாணு மஹாதேவ குருக்களின் மறைவுக்கு...

2025-03-26 13:36:17
news-image

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக...

2025-03-26 13:46:14
news-image

அமைச்சர் சமந்த வித்தியாரத்ன - அமெரிக்க...

2025-03-26 12:36:39
news-image

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதலாவது...

2025-03-26 12:48:24
news-image

போதைப்பொருள் கடத்தல்காரரான “படோவிட்ட அசங்க”வின் உதவியாளர்...

2025-03-26 12:53:34
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-26 13:19:39
news-image

வெலிகந்த பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியின்...

2025-03-26 12:38:35
news-image

வடக்கு மீனவர் பிரச்சனை ; இருதரப்பு...

2025-03-26 11:49:47
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய...

2025-03-26 11:36:32