(நெவில் அன்தனி)
அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 59ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை எதிர்த்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
சாய் சுதர்சன், அணித் தலைவர் ஷுப்மான் கில் ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனையை சமப்படுத்தி குஜராத்தின் வெற்றிக்கு அடிகோலியிருந்தனர். அத்துடன் மொஹித் ஷர்மாவும் சிறப்பாக பந்துவீசி சென்னையை கட்டுப்படுத்தினார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 231 ஓட்டங்களைக் குவித்தது.
இண்டியன் பிறீமியர் லீக் போட்டி வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸினால் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.
மும்பை இண்டியன்ஸுக்கு எதிராக கடந்த வருடம் 3 விக்கெட்களை இழந்து பெற்ற 233 ஓட்டங்களே குஜராத் டைட்டன்ஸ் ஒரு போட்டியில் பெற்ற முந்தைய அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.
ஆரம்ப வீரர்களான சாய் சுதர்சன், அணித் தலைவர் ஷுப்மான் கில் ஆகிய இருவரும் மிகத் திறமையாக, அதேவேளை அதிரடியாக துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்து 110 பந்துகளில் 210 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனையை சமப்படுத்தினர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற இண்டியன் பிறீமியர் லீக் போட்டியில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் சார்பாக குவிடன் டி கொக், கே.எல். ராகுல் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 210 ஓட்டங்களே இதற்கு முன்னர் அதிசிறந்த ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக இருந்தது.
சாய் சுதர்மன் 51 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 103 ஓட்டங்களையும் ஷுப்மான் கில் 55 பந்துகளில் 9 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 104 ஓட்டங்களையும் பெற்றனர்.
டேவிட் மில்லர் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
232 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
சென்னை சுப்பர் கிங்ஸின் துடுப்பாட்டம் ஆரம்பத்தில் மிக மோசமாக இருந்தது.
முதல் 3 ஓவர்களுக்குள் 3 விக்கெட்கள் சரிந்ததுடன் மொத்த எண்ணிக்கை வெறும் 10 ஓட்டங்களாக இருந்தது.
ரச்சின் ரவிந்த்ரா (1), அஜின்கியா ரஹானே (1), அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாட் (0) ஆகிய மூவரே முதல் 3 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தவர்களாவர்.
அதன் பின்னர் டெரில் மிச்சல், மொயீன் அலி ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 57 பந்துகளில் 109 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.
ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் 5 விக்கெட்கள் சரிந்தன.
டெரில் மிச்செல் 34 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 63 ஓட்டங்களையும் மொயீன் அலி 36 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.
தொடர்ந்து ஷிவம் டுபெ 21 ஓட்டங்களையும் ரவிந்த்ர ஜடேஜா 18 ஓட்டங்களையும் பெற்றனர்.
கடைசியில் எம்.எஸ். தோனி தனது வழமையான அதிரடி மூலம் 11 பந்துகளில் ஒரு பவுண்டறி, 3 சிக்ஸ்களுடன் 26 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
பந்துவீச்சில் மோஹித் ஷர்மா 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராஷித் கான் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ஷுப்மான் கில்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM