வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உணவகத்துடன் கூடிய வெதுப்பகம் ஒன்றின் கழிவு நீரைச் சீரற்ற வகையில் வீதிக்கு வெளியேற்றிய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார பரிசோதகர்கள் வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தனர்.
வவுனியா, புகையிரத நிலைய வீதி, வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுடன் கூடிய வெதுப்பகத்தின் கழிவு நீரானது தாங்கி ஒன்றிற்குச் சென்று அங்கிருந்து முறையான ஒழுங்கமைப்பு இன்றி வாய்க்கால் ஊடாக வீதிக்கு வந்துள்ளது.
இவ்வாறு தொடர்ச்சியாக வந்த நிலையில் அப் பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன், அருகில் வீதியோரமாக மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடுபவர்களும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இதனையடுத்து மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் பல தடவை வெதுப்பக கழிவு நீரை வீதிக்கு விட வேண்டாம் எனக் கூறியும் அவர்கள் கவனம் செலுத்தாமையால் ஆத்திரமடைந்த மரக்கறி வியாபார நிலைய உரிமையாளர் குறித்த கழிவு நீரை அள்ளி வெதுப்பகம் முன்பாக ஊற்றியுள்ளதுடன், இது தொடர்பில் வவுனியா நகரசபை சுகாதார பரிசோதகர்களுக்கும் தெரியப்படுத்தினர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த சுகாதார பரிசோதகர்கள் வெதுப்பகத்தின் கழிவு நீர் முகாமைத்துவத்தை பார்வையிட்டதுடன், அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கி குறித்த கழிவு நீர் முகாமைத்துவத்தைச் சீர் செய்து விட்டு வெதுப்பகத்தை திறக்குமாறு கூறி அதனை பூட்டினர்.
இதன்பின்னர், குறித்த கழிவு நீர் வெளியேற்றும் செயன்முறை சீர் செய்யப்பட்டதுடன், சுகாதார பரிசோதகர்களின் அனுமதியுடன் குறித்த வெதுப்பகம் மீளவும் திறக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM