சட்டவிரோதமாக இயங்கி வந்த மரக் களஞ்சியசாலையொன்றில் 100 இலட்சம் ரூபா பெறுமதியான மரப்பலகையுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இன்று வெள்ளிக்கிழமை (10) புத்தளம் வனப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டன.
புத்தளம் நகரை அண்மித்த பகுதியில் இந்த மரக் களஞ்சியசாலை சட்டவிரோதமான முறையில் சிசிரிவி கெமரா அமைப்புகளைப் பயன்படுத்தி மிகவும் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது .
இந்த மரப்பலகை செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட மரங்கள் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, மரம் வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பல இயந்திரங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த களஞ்சியசாலையை நடத்தி வந்த பிரதான சந்தேக நபர் சுற்றிவளைப்பின் போது தப்பிச் சென்றுள்ளதுடன், இவரைக் கைது செய்யவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM