சட்டத்தைக் கையில் எடுக்கும் அதிகாரம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடையாது - பிரேம்நாத் சி.தொலவத்தே

10 May, 2024 | 01:11 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சட்டத்தைச் செயற்படுத்துவதாகக் குறிப்பிட்டுக் கொண்டு,சட்டத்தை பொலிஸாரால் கையில் எடுக்க முடியாது.ஒருசில பொலிஸாரின் செயற்பாடுகளினால் தான் சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸாரை  எதிர்க்கிறது என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்தே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற  அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் யுக்திய சுற்றிவளைப்பு சிறந்ததாகக் காணப்பட்டாலும்,ஒருசில குறைபாடுகளும் காணப்படுகின்றன.

யுக்திய சுற்றிவளைப்பை முன்னிலைப்படுத்தி ஒருசில பொலிஸார் முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள்.கொழும்பு மாவட்டத்தில் .இவ்வாறான நிலை காணப்படுகிறது.

சட்டத்தை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு சட்டத்தை பொலிஸாருக்கு கையில் எடுக்க முடியாது.பொலிஸார் தமது வரையறைக்கு அப்பாற்பட்டுச் செயற்படும் போது பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெறும் இவ்வாறான காரணிகளால் தான் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸாரின் செயற்பாடுகளை விமர்சிக்கிறது.

ஒருசில பொலிஸாரின் முறையற்ற செயற்பாடுகள் பால் குடத்தில்  ஒரு துளி விசம் கலந்தது போல் மாறி விடுகிறது.ஆகவே யுக்திய சுற்றிவளைப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு முறையற்ற வகையில் செயற்படும் பொலிஸார் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், பொலிஸ்மா அதிபரும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் தொடர் மழையால் வயல் நிலங்கள்...

2025-01-15 13:41:27
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2025-01-15 12:52:44
news-image

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'வெலேசுதா' உட்பட...

2025-01-15 12:57:59
news-image

இலங்கையின் முன்னணி வயலின் இசைக் கலைஞர்...

2025-01-15 13:52:05
news-image

இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின்...

2025-01-15 12:30:02
news-image

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான்...

2025-01-15 12:20:40
news-image

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபக தலைவர்...

2025-01-15 12:23:16
news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் ஒருவர்...

2025-01-15 11:49:14
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-15 11:47:55
news-image

12-40 வயதுக்குட்ட 50 வீதமானோருக்கு மின்னஞ்சல்...

2025-01-15 11:58:19
news-image

வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு பரீட்சைகளுக்கான...

2025-01-15 11:45:28
news-image

கட்டுநாயக்கவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் ஒருவர்...

2025-01-15 11:32:54