வீதி அபிவிருத்தி சபைக்கு சொந்தமான லொறி ஒன்று 400 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில்   ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனூமதிக்கப்பட்டுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். 

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியின், நோட்டன் நகரை அண்மித்த பகுதியிலேயே இன்று காலை 5.30 மணியளவில் இவ்விபத்து சம்பவித்துள்ளது. 

சாரதிக்கு நித்திரை ஏற்பட்டுள்ளதால் விபத்து சம்பவித்துள்ளதுடன், விபத்தில் காயமடைந்த சாரதி லக்ஷபான வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டுளார்.

மேலும் விபத்துக்குளான லொறி பாரிய அளவில் சேதமாகியுள்ளதாகவும்,   மேலதிக விசாரணை தொடர்வதாகவும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.