மூதாட்டியிடம் கைத்தொலைபேசியை கொள்ளையிட்ட மூவருக்கு 6 மாத சிறைத்தண்டனை!

Published By: Digital Desk 7

10 May, 2024 | 12:24 PM
image

மூதாட்டி ஒருவரிடம் கைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட  மூவருக்கு நீதிமன்றத்தினால்  ஆறு மாதகால சிறைத்தண்டனை விதித்ததோடு, அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. 

பருத்தித்துறை தும்பளை பகுதியில் பழைய பொருட்கள் சேகரிக்க வாகனம் ஒன்றில் சென்ற மூவர் , வீட்டில் தனித்திருந்த மூதாட்டியின் கைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் பருத்தித்துறை பொலிஸாரினால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் , மூவரையும் மன்று குற்றவாளியாக கண்டு, மூவருக்கும் தலா 06 மாத கால சிறைத்தண்டனை விதித்து, அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. 

அதேவேளை பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு குற்றவாளிகளான மூவரும் தலா 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் விசேட அறிக்கை

2025-12-14 20:53:23
news-image

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி...

2025-12-14 22:49:10
news-image

அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்த...

2025-12-14 22:04:01
news-image

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

2025-12-14 19:41:06
news-image

அரசாங்கத்தின் பங்களிப்பில் கல்வி பயின்று, பாராட்டுப்...

2025-12-14 19:51:08
news-image

இந்த நேரத்தில் கல்வி மாணவர்களுக்குச் சுமையாக...

2025-12-14 17:12:00
news-image

யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின்...

2025-12-14 17:13:55
news-image

நாட்டிலிருந்து புறப்பட்டது அமெரிக்க குழு

2025-12-14 17:12:45
news-image

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2025-12-14 16:09:36
news-image

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து...

2025-12-14 16:09:19
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் தீப்பிடித்து...

2025-12-14 15:32:01
news-image

பேராதனை புகையிரதப் பாலத்தின் சேதங்களை மதிப்பீடு...

2025-12-14 15:53:00