(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
மேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் வர்த்தகப் பிரிவு பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கவனம் செலுத்தி, அவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) விசேட கூற்றொன்றை முன்வைத்துக் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
மேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. 6000 வெற்றிடங்களில் 2951 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றாலும் வர்த்தகப் பிரிவுப் பட்டதாரிகளில் 1200 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும் ஒரு வர்த்தக பட்டதாரிக்கேனும் இதுவரை நியமனம் கிடைக்கவில்லை.
இது தொடர்பில் அவதானம் செலுத்தி அவர்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM