(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக மொஹமட் முஜிபுர் ரஹ்மான் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் (தேசியப் பட்டியல்) பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேயின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி 2024ஆம் ஆண்டு மே மாதம் 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அக்கட்சியின் (தேசியப் பட்டியல்) பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு கொழும்பு மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டிருந்த முஜிபுர் ரஹ்மான், 2023 ஜனவரி 20ஆம் திகதி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்திருந்தார்.
இவர் எட்டாவது பாராளுமன்றத்தில் கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM