இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் MIZUKOSHI Hideaki,தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் Sandile Schalk மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர் திருமதி. Siri Walt ஆகியோர் வியாழக்கிழமை (09) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் ஜப்பானியத் தூதரகத்தின் அரசியல் பிரிவுக்கான முதலாவது செயலாளர் MURATA Shinichi, தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் பிரிவுக்கான இரண்டாவது செயலாளர் Zanethemba Tshangela, சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அரசியல் பிரிவுக்கான முதலாவது செயலாளர் Justine Boillat ஆகியோரும், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கலாநிதி ரிஷ்வி சாலி, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா போல்ராஜ், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, பிமல் ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, இலங்கையில் இனங்களுக்கு இடையிலான சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இது பற்றிய தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் மற்றும் தீர்வுக்கான அணுகுமுறைகள் குறித்தும் தூதுக்குழு பிரதிநிதிகள் வினவினர்.
இதன்போது தேசிய மக்கள் சக்தி “தாம் எந்தவொரு நிலையிலும் அரசியலுக்காக இனவாதத்தை பயன்படுத்த தயாரில்லை” என்பதை சுட்டிக்காட்டியது. சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படையில் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தாம் தயாராக இருப்பதாக வலியுறுத்திய தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், தேசிய பிரச்சினைக்கு தனித்து ஒரு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியாது எனவும், அது ஏனைய காரணிகளுடன் பிணைந்து காணப்படுவதால் தீர்வினை எட்டும்போது ஒட்டுமொத்த விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியது. இந்த விவகாரங்களில் சர்வதேச சமூகம் கொண்டிருக்கும் அக்கறை குறித்து தேசிய மக்கள் சக்தி தூதுக்குழு பிரதிநிதிகளுக்கு விஷேடமாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM