(நெவில் அன்தனி)
தரம்சாலா, ஹிமாச்சல் ப்ரதேஷ் கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) இரவு நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 58ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 60 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு இலகுவாக வெற்றிகொண்டது.
விராத் கோஹ்லி, ரஜாத் பட்டிடார், கெமரன் க்றீன் ஆகியோரின் அதிரடிகளும் பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சுகளும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
இன்றைய போட்டியில் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த விராத் கோஹ்லி 12 இன்னிங்ஸ்களில் ஒரு சதம், 5 சதங்களுடன் மொத்தமாக 634 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அவர் மாத்திரமே இவ்வருட போட்டிகளில் இதுவரை 600 ஓட்டங்களைக் கடந்த ஒரே ஒரு வீரராவார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 241 ஓட்டங்களைக் குவித்தது.
அதிரடி வீரர் அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் 9 ஓட்டங்களுடனும் வில் ஜெக்ஸ் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்க 5ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 43 ஓட்டங்களாக இருந்தது.
அதன் பின்னர் விராத் கொஹ்லி இரண்டு பெறுமதியான இணைப்பாட்டங்களில் பங்காற்றி அணியின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தார்.
மூன்றவாது விக்கெட் ரஜாத் பட்டிடாருடன் 32 பந்துகளில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்த விராத் கோஹ்லி, 4 ஆவது விக்கெட்டில் கெமரன் க்றீனுடன் 46 பந்துகளில் மேலும் 92 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
விராத் கோஹ்லி 47 பந்துகளில் 7 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 92 ஓட்டங்களையும் ரஜாத் பட்டிடார் 23 பந்துகளில் 3 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களையும் கெமரன் க்றீன் 27 பந்துகளில் 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
தினேஷ் கார்த்திக் 7 பந்துகளில் ஒரு பவுண்டறி, 2 சிக்ஸ்களுடன் 18 ஓட்டங்களை விளாசினார்.
பந்துவீச்சில் ராகுல் சஹார் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வித்வாத் காவேரப்பா 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
242 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 17 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத்' தழுவி ப்ளே ஓவ் வாய்ப்பை இழந்தது.
பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அதிரடி ஆரம்ப வீரர் ப்ரப்சிம்ரன் சிங் முதல் ஓவரிலேயே 6 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
தொடர்ந்து ஜொனி பெயாஸ்டோவ், ரைலி ரூசோவ் ஆகிய இருவரும் 2 விக்கெட்டில் 31 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பெயாஸ்டோவ் 27 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் சீரான இடைவேளியில் விக்கெட்கள் சரியத் தொடங்கின.
ரைலி ரூசோவ் 27 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார். ஷஷாங் சிங் 19 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பெற்று களம் விட்டு வெளியேறினார்.
மத்திய வரிசையில் அணித் தலைவர் சாம் கரன் மாத்திரம் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 22 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். ஏனையவர்களில் எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை.
பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஸ்வப்னில் சிங் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கர்ண் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM