மலேசியாவில் உயிரிழந்த மஸ்கெலியா இளைஞன்

Published By: Vishnu

09 May, 2024 | 09:55 PM
image

மஸ்கெலியா மொடிங்ஹேம் தோட்டத்தைச் சேர்ந்த ராஜகுமார் டேவிட்சன் என்ற 24 வயது இளைஞன் பணிக்காக மலேசியா சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

மலேசியா கோலாலம்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் திகதி கொதிகலன் (Boiler) குறித்த இளைஞன் மீது விழுந்ததில் படுகாயமடைந்து கோலாலம்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 5 ஆம் திகதி காலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டிருந்த அந்நாட்டு பொலிஸார் இளைஞனின் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து இளைஞனின் சடலம் புதன்கிழமை (8) இரவு 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளது.

இந்நிலையில், இளைஞனின் தந்தையிடம் ஒப்படைக்கப்படவுள்ள  சடலம் அவரின் சொந்த ஊரான மஸ்கெலியா மொட்டிங்ஹேம் தோட்டத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு இறுதி கிரிகைகள் இடம்பெறவுள்ளதாக அவரது தந்தை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதிகள் போல் செயற்படுவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்க...

2024-06-13 16:54:47
news-image

கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்புக்கு...

2024-06-13 20:54:34
news-image

நாளை 2 மணிக்குள் சாதகமான பதிலின்றேல்...

2024-06-13 17:35:08
news-image

நுவரெலியாவில் உடலின் கீழ் பகுதி இல்லாமல்...

2024-06-13 20:19:38
news-image

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய...

2024-06-13 19:53:18
news-image

இரு முச்சக்கர வண்டிகள் நேருக்குநேர் மோதி...

2024-06-13 19:07:27
news-image

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த...

2024-06-13 17:36:34
news-image

மன்னாரிலும் தபால் தொழிற்சங்கத்தினர் சுகயீன போராட்டம்

2024-06-13 17:34:27
news-image

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி...

2024-06-13 17:33:18
news-image

தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு...

2024-06-13 17:27:50
news-image

மற்றுமொரு ரயில் தடம் புரள்வு ;...

2024-06-13 17:13:01
news-image

யாழில் தேசிய மக்கள் சக்தியினரால் துண்டுப்...

2024-06-13 17:02:22