களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை ஹிம்புட்டான பகுதியில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர் கைதுசெய்யப்படும் போது, துப்பாக்கி பிரயோகத்துக்கு பயன்படுத்தபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரொருவர் கடந்த 22 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் மற்றுமொருவர் நேற்று (26) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில்  பாதாள உலகக் குழு நபரான சமயங், சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் உட்பட ஏழு பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.