அட்சய திருதியை அன்று மகாலட்சுமியை வணங்கி சுப பலன்களை பெறுவது எப்படி?

Published By: Digital Desk 7

09 May, 2024 | 04:39 PM
image

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் அவை அட்சயம் போல் வளரும் என்பது எம்முடைய முன்னோர்களின் வாக்கு. தற்போது இது  வணிக மேம்பாட்டிற்கான உத்தியாக மாற்றப்பட்டிருந்தாலும் இந்த அட்சய திருதியை நாம் அனைவரும் மகாலட்சுமியை வணங்கி கொண்டாட வேண்டும்.

இந்த நாளில் குண்டுமணி அளவிற்கு தங்கம் வாங்கும் வேண்டும் என்பதுதான் எம்மில் பலருக்கும் ஆசை. ஆனால் அது அனைவராலும் நிறைவேற்ற இயலாது என்பது நிதர்சனம். சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி தினத்தை தான் அட்சய திருதியை என குறிப்பிடுகிறோம். இந்த நாளில் மகா லட்சுமியின் பரிபூரண அருள் இந்த உலகத்தாருக்கு கிடைப்பதாகவும், இதனால் அனைவரின் செல்வ நிலையும் தற்போது உள்ள நிலையை விட மேம்படுவதாகவும் ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள் இதனால் இந்த தினத்தன்று குபேரனையும், மகாலட்சுமியையும் வணங்க வேண்டும் என்றும் எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மே பத்தாம் திகதியன்று அதாவது நாளை அதிகாலை 4: 17 முதல் அடுத்த நாள் 2: 51 வரை அட்சய திருதியை திதி இருக்கிறது. வெள்ளிக்கிழமையும், ரோகிணி நட்சத்திரமும் கூடிய நாளில் அட்சய திருதியை வருவதால் மகாலட்சுமியை வணங்குவது கூடுதல் பலன் கிட்டும்.

இந்த நாளில் தங்கத்தை வாங்க விரும்புபவர்கள் காலை 9:30 மணி முதல் 10:30 மணிக்குள்ளாகவும், அதன் பிறகு 12:30 மணி முதல் 1: 30 மணிக்குள்ளாகவும், இதனையும் தவறவிட்டால் மாலை 5:30 மணி முதல் இரவு 7:30 மணிக்குள் தங்கத்தை வாங்கலாம். இந்த தருணத்தில் வாங்கும்  தங்கம் உங்கள் வீட்டில் மகாலட்சுமியாக தங்கி வளர்ந்து உங்களது செல்வ வளத்தையும், செல்வ நிலையையும் உயர்த்தும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

உடனே எம்மில் சிலர், 'நாடு இருக்கிற நிலையில்  நாம் தங்கம் வாங்கும் நிலையில்லா இருக்கிறோம் .வேறு ஏதேனும் மாற்று உபாயம் இருக்கிறதா ?என கேட்பர். இவர்களுக்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் எளிய குறிப்புகளை முன்மொழிந்திருக்கிறார்கள்.

இந்த நாளில் மேலே குறிப்பிட்ட சுப முகூர்த்த வேலையில் உங்கள் வீட்டின் பூஜை அறையில் மகாலட்சுமியின் உருவப்படத்தை வைத்து பூஜித்து வணங்க வேண்டும். இதன் போது வெள்ளை மொச்சை எனப்படும் உணவு பொருளை ஒரு பிடி வாங்கி, அதனை ஒரு தட்டில் பரப்பி, அதன் மீது புதிதாக வாங்கிய அகல் விளக்கை ஒன்றை வைத்து, அதில் பசு நெய்யையும் தாமரைத் தண்டு திரியையும் வைத்து விளக்கேற்றி உங்களது பொருளாதார குறைகள் நீங்கி, செல்வ வளம் மேலோங்க வேண்டும் என்ற கோரிக்கையை மனதார மகாலட்சுமியிடம் சமர்ப்பணம் செய்யுங்கள். உங்களது கோரிக்கை நிச்சயம் நிறைவேறும்.

அட்சய திருதியை தினத்தன்று தங்கத்தை வாங்க முடியவில்லை என்றாலும்  மண்சட்டி ஒன்றை வாங்கி அதில் தண்ணீரை ஊற்றி வைத்து மகாலட்சுமியை நினைத்து வணங்குங்கள். இதுவும் சுப பலன்களை அள்ளித் தரும் சூட்சும வழிபாடு.

இந்த வழிபாட்டை மேற்கொள்வதற்கும் ஏதேனும் தடை ஏற்பட்டால் ஒரு கண்ணாடி கோப்பையை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் தண்ணீரை நிறைத்து விட்டு ஆவாரம் பூவை வைத்து மகாலட்சுமியை நினைத்து செல்வ வளம் உயர வேண்டும் என வணங்குங்கள். இதுவும் உங்களுக்கு உரிய பலனை அள்ளி அள்ளி வழங்கும் சூட்சம வழிபாடு தான். குறிப்பாக இதனை மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் சுப முகூர்த்த வேலையில் தவறாமல் மேற்கொண்டால் பலன் கிடைப்பதை அனுபவத்தில் உணரலாம்.

சிலருக்கு இத்தகைய வழிபாட்டினை மேற்கொள்வதில் முழுமையான மனநிறைவு ஏற்படவில்லை என்றால் ஒரு கைப்பிடி அளவிற்கு பேரீச்சை பழத்தை வாங்கி அதனை நைவேத்தியமாக படைத்து மகாலட்சுமியை வணங்குங்கள்.  உங்களது கோரிக்கையை சமர்ப்பித்த பிறகு நைவேத்தியமாக வைக்கப்பட்ட பேரீச்சம் பழத்தை நீங்களும், உங்களது குடும்ப உறுப்பினர்களும், அக்கம் பக்கத்தினருக்கும் பிரசாதமாக வழங்குங்கள். இதுவும் உங்களது செல்வ நிலையை உயர்த்தும்.

பேரீச்சம் பழத்தை தேடி பயணித்து அது கிடைக்கவில்லை என்றாலோ அல்லது அதன் விலை அதிகம் என்றாலோ அல்லது தரமான பேரீச்சம் பழம் கிடைக்கவில்லை என்றாலோ கவலை அடையாதீர்கள். ஒரு பிடி டைமண்ட் கல்கண்டு+ ஒரு பிடி குண்டு மஞ்சள் + சிறிதளவு பன்னீர் ரோஜா ஆகிய மூன்றையும் வாங்கி வந்து மகாலட்சுமி முன் சமர்ப்பித்து சுபமுகூர்த்த தருணத்தில் 'ஓம் மகாலட்சுமியே நமஹ!' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து மகாலட்சுமி தாயாரை வணங்கினாலும் செல்வ வளம் குறித்த உங்களது கோரிக்கை நிறைவேறும்.

பன்னீர் ரோஜா -டைமண்ட் கல்கண்டு - குண்டு மஞ்சள் - ‌போன்ற பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது சிக்கல் ஏற்பட்டாலோ உடனடியாக நாட்டு மருந்து பொருட்கள் விற்பனை நிலையத்தில் கிடைக்கும் ஜாதிக்காயை மூன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதனுடன் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் பன்னீரையும் வாங்கிக் கொள்ளுங்கள். மகாலட்சுமி தாயாரின் உருவப்படத்தை உங்களது பூஜை அறையில் வைத்து விட்டு அந்த தாயாருக்கும் முன் ஒரு கண்ணாடி கோப்பையில் பன்னீரை நிறைத்து அதில் இந்த மூன்று ஜாதிக்காயை ஊற வைத்து விடுங்கள். ஜாதிக்காய் இயல்பிலேயே உங்களது நீங்கள் வசிக்கும் இடத்தில் உள்ள எதிர்மறையான ஆற்றலை விரட்டி நேர் நிலையான ஆரா ஆற்றலை அதிகரிக்கச் செய்து அதன் மூலம் முக வசியத்தை ஏற்படுத்தி பொருளாதார வளத்தை உயர்த்தும் வல்லமை கொண்டது. உங்களது கோரிக்கை நிறைவேறிய பிறகு அடுத்த நாள் பன்னீரில் ஊறிய ஜாதிக்காயை இழைத்தால் அதிலிருந்து பசை போன்று பிசின் வரும் அதனை உங்களது நெற்றியில் திலகமாக இட்டுக் கொண்டால் லாபம் உயரும்.

மேற்கூறிய எளிய வழிபாட்டினை தவறாது மேற்கொண்டு அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை வணங்கி வணங்குங்கள். உங்களது செல்வநிலை உயர்வதை அனுபவத்தில் காணலாம்.

பொதுவாக இந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று மேஷம், கன்னி, விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் தவறாது மகாலட்சுமியை வணங்கினால் அடுத்த ஆண்டிற்குள் உங்களுடைய செல்வ நிலை உயரும் என்பது உறுதி. ஏனைய ராசிக்காரர்களும் மகாலட்சுமி தாயாரை வணங்கி பிரார்த்தனை செய்தால் உங்களது செல்வ நிலையும் உயரும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்க வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான எளிய...

2024-06-15 14:04:38
news-image

பண வசியத்திற்கும், மன அமைதிக்கும் இரண்டு...

2024-06-14 16:35:06
news-image

கடன் பிரச்சனை தீர்வதற்கான எளியதான பரிகாரங்கள்..!

2024-06-13 15:52:06
news-image

நினைத்ததை நடத்தி வைக்கும் ஏலக்காய் தீப...

2024-06-12 15:14:53
news-image

நோயை குணப்படுத்தும் எளிய பரிகாரம்...!?

2024-06-11 19:02:13
news-image

சர்வ அருளை வழங்கும் சரள யோகம்

2024-06-10 21:27:26
news-image

புண்ணியத்தை அருளும் ஸ்ரீ நாக யோகம்!

2024-06-08 16:47:15
news-image

மீன ராசியினர் தொழிலதிபராக உயர்வதற்கான எளிய...

2024-06-07 18:49:43
news-image

தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள் -...

2024-06-07 11:06:12
news-image

தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள் -...

2024-06-04 14:05:07
news-image

தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள் -...

2024-06-03 15:50:36
news-image

தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள் -...

2024-06-01 20:22:24