அமானா வங்கியின் சித்தீக் அக்பர், AAFI இன் தலைவராக நியமனம்

09 May, 2024 | 04:38 PM
image

அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக் அக்பர், மாற்று நிதிச் சேவை நிறுவனங்களின் சம்மேளனத்தின் (AAFI) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமையை அமானா வங்கி கௌரவித்துள்ளது.  வட்டிசாராத இஸ்லாமிய வங்கிகள் பிரிவில் சித்தீக் கொண்டுள்ள தலைமைத்துவத்தை உறுதி செய்யும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல்கள் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் எனும் நிலையில் அமானா வங்கியுடன்  சித்தீக் இணைந்து கொண்டதுடன், பின்னர் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவராக அவர் பதவி உயர்வு பெற்றிருந்தார். அமானா வங்கியுடன் இணைந்து கொள்வதற்கு முன்னதாக, நிதி, தொலைத்தொடர்பாடல் மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் போன்ற துறைகளில் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் வர்த்தக நாம முகாமையாளர் எனும் பதவிகளை இவர் வகித்துள்ளார். இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் பொருளாளராகவும் சித்தீக் செயலாற்றியுள்ளார்.

தொழிற்துறையில் அமானா வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி, பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் அமர்வுகளில் பிரதான வளவாளராக சித்தீக் உரையாற்றியுள்ளதுடன், தொழிற்துறையினுள் தமது நிபுணத்துவ அறிவுக்காக நன்மதிப்பையும் பெற்றுள்ளார். 2015 இல் AAFI அறிமுக அமர்வின் உப தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். OrphanCare நம்பிக்கை நிதியத்தை நிறுவுவதிலும் இவர் முக்கிய பங்காற்றியிருந்ததுடன், முகாமைத்துவ அங்கத்தவராக அவர் செயலாற்றுவதுடன், இளம் வயதுவந்த அநாதரவானவர்களுக்கு இரண்டாவது கைவிடப்படலை தவிர்ப்பதற்கு ஆதரவளிக்கின்றார். 

2015 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட AAFI இல் தொழிற்துறையைச் சேர்ந்த சகல பிரதான வங்கிகளும், நிதிச் சேவை நிறுவனங்களும் அங்கம் பெற்றுள்ளன. வட்டிசாராத பங்குபற்றல் வங்கியியல் மற்றும் நிதியியல் தொழிற்துறையை முன்னேற்றுவதற்கு, AAFI இனால் சகல இலங்கையர்களுக்கும் தேசத்துக்கும் பெருமளவு அனுகூலங்கள் வழங்கப்படுவதுடன், இந்த முன்னேற்றகரமான நிதியியல் மற்றும் வங்கியியல் மாதிரியை தூர நோக்குடைய ஈடுபாட்டுடன் மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கப்படுகின்றன.

தமது நியமனம் தொடர்பில் சித்தீக் அக்பர் கருத்துத் தெரிவிக்கையில், “மாற்று நிதிச் சேவை நிறுவனங்களின் சம்மேளனத்தின் (AAFI) தலைவராக பணியாற்றுவதற்கு கிடைத்த இந்த வாய்ப்பை எண்ணி நான் மிகவும் பெருமை கொள்கின்றேன். இந்த பிரத்தியேகமான வங்கியியல் மற்றும் நிதியியல் வளர்ச்சி தொடர்பான ஒருமைப்பாடு மற்றும் கூட்டுறவை கட்டியெழுப்புவதில் எமது மாற்று வங்கியியல் சமூகம் தமது ஒன்றிணைந்த அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவினருடனும், தொழிற்துறையுடனும் இணைந்து துறைசார் சவால்களுக்கு முகங்கொடுப்பது, அறிவுப் பகிர்வை ஊக்குவிப்பது மற்றும் அனைத்து இலங்கையர்கள் மத்தியிலும் வட்டிசாராத வங்கியியல் மாதிரியை அனுபவிப்பதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் செயலாற்றுவதற்கு நான் எதிர்பார்க்கின்றேன். எனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் தொழிற்துறையில் வெளிப்பாட்டை மேம்படுத்திக் கொள்ள அமானா வங்கி எனக்கு வழங்கியிருந்த வாய்ப்புக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார். 

AAFI இன் தலைவராக சித்தீக் இயங்குவதற்கு மேலதிகமாக, அதன் உப தலைவராக சுரேஷ் பெரேரா (KPMG), செயலாளராக ரிப்கா சியார்ட் (KPMG) மற்றும் பொருளாளராக பஹார் நயன் (KPMG) ஆகியோர் அங்கம் பெறுகின்றனர்.  இந்த சம்மேளனத்தின் இதர அங்கத்தவர்களாக உப பொருளாளராக ஹிஷாம் அலி (ஹற்றன் நஷனல் வங்கி) மற்றும் உப செயலாளராக இல்சாம் அவ்பர் (LOFC) ஆகியோர் காணப்படுகின்றனர். சம்மேளனத்தின் ஸ்தாபக தலைவர் மறைந்த ரவி அபேசூரிய ஆவார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.  

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெல்மேஜ் ஹெல்த்கெயார் மூலம் பல் உட்பொருத்தல்...

2024-06-13 18:52:47
news-image

பூமிக்கு 2,000 மரங்கள் : உலக...

2024-06-13 15:53:57
news-image

கூட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பு...

2024-06-10 17:55:53
news-image

பான் ஏசியா வங்கியுடன் இலங்கையின் தேசிய...

2024-06-04 11:51:48
news-image

Uber Springboard: இலங்கையில் வழிகாட்டல் திட்டத்துடன்...

2024-06-03 16:42:48
news-image

ராணி சந்தனத்திடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு தங்கப் பவுண்கள்

2024-06-03 16:53:26
news-image

LMD இன் மிகவும் விரும்பப்படும் தயாரிப்பு...

2024-06-03 17:13:46
news-image

அளவுத்திருத்த சிறப்பின் ரகசியங்களை திறப்பதற்கான நுழைவாயில்...

2024-05-30 17:29:08
news-image

சுங்கத் திணைக்களத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்...

2024-05-21 17:20:25
news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24
news-image

"IT Gallery - Hikvision Partner...

2024-05-20 17:31:03
news-image

உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும்...

2024-05-20 17:33:11