அக்ரோமெகலி எனும் வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கும் சிக்கலுக்கான நவீன சிகிச்சை

Published By: Digital Desk 7

09 May, 2024 | 04:35 PM
image

எம்மில் சிலரின் தோற்றம் வியப்பை ஏற்படுத்தும். அதிக உயரத்துடனும் அல்லது வித்தியாசமான குரல் வளத்துடனும் அவர்களை எதிர்கொள்ளும்போது நாம் வியப்படைவோம்.  இதனை மருத்துவ மொழியில் அக்ரோமெகலி என்று குறிப்பிடுகிறார்கள். இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து முறையான சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

உங்களுடைய மூளைப்பகுதியில் பிட்யூற்றரி எனும் சுரப்பி இயங்குகிறது. இந்த சுரப்பி உங்களின் வளர்ச்சிக்கான ஹோர்மோன்களை சுரக்கிறது. இந்த ஹோர்மோன் இயல்பான அளவை விட கூடுதலாக சுரந்தால் இத்தகைய பாதிப்பை உண்டாக்குகிறது. பொதுவாக இத்தகைய பாதிப்பை எதிர்கொள்ளும் பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும்போது அவர்கள் அதிக உயரத்திற்கு வளர வழி வகுக்கிறது.  இது அரிதானது என்றாலும் இந்த பாதிப்பு உங்களுடைய கை, கால், முகம், எலும்பு என எங்கு வேண்டுமானாலும் பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் வழக்கமாக அணியும் காலணியை குறுகிய கால அவகாசத்திற்கு பிறகு அணிய முடியவில்லை என்றால் உங்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என அவதானிக்கலாம். வேறு சிலருக்கு கீழ் தாடை பகுதி, புருவ எலும்பு, மூக்கு, தடித்த உதடுகள், பற்களுக்கு இடையேயான இடைவெளி  என பல மாற்றங்களை இத்தகைய ஹோர்மோன் சுரப்பு ஏற்படுத்திவிடும்.

பிட்யூற்றரி சுரப்பியில் சுரக்கும் வளர்ச்சிக்கான ஹோர்மோன்களில் சுரப்பில் சமசீரற்ற தன்மை, பிட்யூற்றரி சுரப்பியில் ஏற்படும் கட்டிகள்  என பல காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

கை கால்கள் இயல்பான அளவை விட கூடுதலாக வளர்ச்சி அடைந்திருப்பது, முகத்தில் உள்ள எலும்புகள், உதடுகள், மூக்கு, நாக்கு போன்றவை இயல்பை விட கூடுதலாக வளர்ச்சி அடைந்திருப்பது,  எண்ணெய் பிசுபிசுப்புள்ள தடித்த தோல் பகுதி, அதிகப்படியான வியர்வை, உடல் துர்நாற்றம், சோர்வு, தசை பலவீனம், வலி, குரல் மாற்றம், மூச்சு குழாயில் அடைப்பு, பார்வையில் தடுமாற்றம், தொடர் தலைவலி, பாலியல் நடவடிக்கைகளில் ஆர்வமின்மை  போன்ற அறிகுறிகள் இருந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என அவதானித்து வைத்தியரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் உயர் குருதி அழுத்தம், இதய பாதிப்பு, சர்க்கரை நோய், தைரொய்ட் சுரப்பி பாதிப்பு, உறக்கமின்மை பாதிப்பு, பார்வை இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

இதன் போது மருத்துவர்கள் உங்களுடைய பிட்யூற்றரி சுரப்பியில் சுரக்கும் வளர்ச்சிக்கான ஹோர்மோனின் சுரப்பின் அளவினை கண்டறிவதற்கான பிரத்யேக பரிசோதனை, எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர்.

பிட்யூற்றரி சுரப்பியில் சுரக்கும் வளர்ச்சிக்கான ஹோர்மோன் இயல்பான அளவில் சீராக உற்பத்தி மற்றும் இயங்குவதற்கான பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை முதன்மையான நிவாரணமாக வழங்குவர். சிலருக்கு பிட்யூற்றரி சுரப்பியில் ஏற்பட்டிருக்கும் கட்டியின் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்த கட்டியை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி நிவாரணம் அளிப்பர்.‌ வெகு சிலருக்கு இந்த கட்டியை அகற்றுவதற்கு கதிர்வீச்சு சிகிச்சலயையும் மேற்கொள்ள பரிந்துரைப்பர். மேலும் சத்திர சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன் நோயாளியின் வயது, உடல் ஆரோக்கியம், பாதிப்பின் வீரியம்  ஆகியவற்றை துல்லியமாக அவதானித்த பிறகு சிகிச்சையை தொடர்வர்.

வைத்தியர் பாலசுப்ரமணியம்
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அசாதாரணமான கண் துடிப்பு பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-20 19:53:31
news-image

முதுகெலும்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-06-19 20:19:16
news-image

பித்தப்பை கற்களை அகற்றும் நவீன சிகிச்சை

2024-06-18 17:32:01
news-image

தோள்பட்டை சவ்வு அழுத்தப் பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-17 15:50:29
news-image

புற்றுநோய் கட்டிகளை லேப்ரோஸ்கோப்பிக் சத்திர சிகிச்சை...

2024-06-15 13:45:29
news-image

தண்டுவடத்தில் ஏற்படும் காசநோய் பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-14 16:56:58
news-image

அசாதாரண கருப்பை ரத்தப்போக்கு பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-12 13:23:09
news-image

இடைநிலை நுரையீரல் தொற்று பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-12 09:12:17
news-image

மூளை கட்டியின் வகைகளும், காரணங்களும்...!?

2024-06-10 17:28:32
news-image

நீரிழிவு நோயால் நரம்பு மண்டல பாதிப்பு...

2024-06-08 16:19:56
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை ரத்த...

2024-06-07 18:48:18
news-image

குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதய குறைபாடு ஏற்படுவதை...

2024-06-04 14:04:02