உயர் சம்பளம் வழங்குவதாகக் கூறி நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் நேற்று (08) கோட்டை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண், சந்தேக நபரான வர்த்தகருடன் வாட்சப் மூலம் அறிமுகமாகியுள்ள நிலையில் குறித்த வர்த்தகர், அவரை உயர் சம்பளத்துடனான வேலைவாய்ப்புக்கான நேர்முகப்பரீட்சையொன்றுக்கு வருமாறு அழைத்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இதன்போது ,இந்த பெண் நேர்முகப்பரீட்சைக்காக தனது கணவருடன் கொள்ளுப்பிட்டியில் உள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பொன்றிற்குச் சென்றுள்ள நிலையில் சந்தேக நபரான வர்த்தகர், கணவரைக் கீழ் அறையில் வைத்து விட்டு இந்த பெண்ணை மேல் மாடியில் உள்ள அறையொன்றிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM