(நெவில் அன்தனி)
ஸ்பெய்னில் நடைபெற்ற 2024 மெட்றிட் பகிரங்க டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சம்பியன் கிண்ணத்தை போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சுவீகரித்தார்.
களிமண்தரை டென்னிஸ் போட்டிகளில் அசத்திவரும் ஸ்வியாடெக்குக்கு இந்த வெற்றி இலகுவாக அமையவில்லை.
மகளிருக்கான ஒற்றையர் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் வீராங்கனைகளுக்கு இடையில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இரண்டாம் நிலை வீராங்கனை அரினா சபலென்காவிடம் கடும் சவாலை எதிர்கொண்ட முதல் நிலை வீராங்கனை இகா ஸ்வியாடெக் 2 - 1 என்ற செட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியனானார்.
மூன்று செட்களிலும் இரண்டு வீராங்கனைகளும் சம அளவில் மோதிக்கொண்டதால் ரசிகர்கள் பெரும் பரபரப்புக்குள்ளானார்கள்.
யார் வெற்றிபெறுவார் என்று சொல்ல முடியாத அளவுக்கு போட்டி கடுமையாக இருந்தது.
முதல் செட்டில் 7 - 5 என்ற புள்ளிகள் கணக்கில் இகா ஸ்வியாடெக் வெற்றிபெற்றார். ஆனால், இரண்டாவது செட்டில் பதிலடி கொடுத்து 6 - 4 என அரினா சபலென்கா வெற்றி பெற செட்கள் நிலை 1 - 1 என சமமானது.
எனினும் கடைசியும் தீர்மானம் மிக்கதுமான செட்டில் மிண்டும் 7 - 6 என வெற்றிபெற்ற ஸ்வியாடெக் சம்பியன் பட்டத்தை சுவீகரித்து களிமண்தரை டென்னிஸ்ஸில் சமகால நட்சத்திரம் என்பதை நிரூபித்தார்.
யூக்ரெய்ன் மீதான ஆக்கிரமிப்பு காரணமாக ரஷ்யாவுக்கும் பெலாரஸுக்கும் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தடை விதித்துள்ளதால் மெட்றிட் பகிரங்க போட்டியில் அரினா சபலென்கா நடுநிலையாளராக போட்டியிட நேரிட்டது. அவர் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவராவார்.
இது இவ்வாறிருக்க, தொழில்முறை டென்னிஸ்ஸில் ஆரம்ப நிலையில் இருக்கும் 22 வயதான ஸ்வியாடெக், அவரது டென்னிஸ் வாழ்க்கைளில் வென்றெடுத்த 20ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும். இந்த வருடம் அவர் வென்ற 3ஆவது பட்டம் இதுவாகும். அத்துடன் இதுவரை களிமண்தரை போட்டிகளில் 8 சம்பியன் பட்டங்களை சூடியுள்ளார்.
ரோலண்ட் கெரொஸ், மெட்றிட், ரோம், ஸ்டுட்கார்ட் ஆகிய களிமண்தரை டென்னிஸ் போட்டிகளில் அசத்தி வரும் ஸ்வியாடெக், நான்கு மாபெரும் டென்னிஸ் (க்ராண்ட் ஸ்லாம்) பட்டங்களை வென்றெடுத்துள்ளார்.
ரோலண்ட் கெரொஸில் நடைபெற்றுவரும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் மாத்திரம் அவர் 3 தடவைகள் (2020, 2022, 2023) சம்பியனாகியுள்ளார். ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் அவர் 2022இல் சம்பியனாகியிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM