(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றிவாகை சூடிய மகளிர் ரி 20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதிபெற்ற சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணியினர் இன்று (09) அதிகாலை தாயகம் திரும்பினர்.
இரண்டு மாதங்களாக இரண்டு வெவ்வேறு நாடுகளில் கிரிக்கெட் தொடர்களில் விளையாடிய இலங்கை மகளிர் அணியினர் அவை இரண்டிலும் வெற்றிபெற்றமை விசேட அம்சமாகும்.
மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கு முன்னர் தென் ஆபிரிக்காவில் இரு வகை கிரிக்கெட் தொடர்களில் இலங்கை விளையாடியிருந்தது.
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 1 - 1 என சமப்படுத்திய இலங்கை, மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் தனதாக்கியது.
தென் ஆபிரிக்காவில் இருந்து நேரடியாக அபு தாபி சென்ற இலங்கை அணி, மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் தான் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றியீட்டியது.
லீக் சுற்றில் தாய்லாந்து, ஸ்கொட்லாந்து, உகண்டா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளையும் அரை இறுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தையும் இறுதிப் போட்டியில் மீண்டும் ஸ்கொட்லாந்தையும் இலங்கை வெற்றிகொண்டிருந்தது.
பங்களாதேஷில் இந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்பதாக மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான இருதரப்பு தொடர்களில் இலங்கை அணி விளையாடவுள்ளது.
இதனிடையே மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை பங்குபற்றவுள்ளது.
இப் போட்டிகள் அனைத்தும் மகளிர் ரி20 உலகக் கிண்ணத்திற்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்ள உதவும் என நாடு திரும்பியதும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சமரி அத்தபத்து கூறினார்.
ரி20 உலகக் கிண்ணத்தில் போட்டிக்கு போட்டி சிறந்த வியூகங்களையும் திட்டங்களையும் வகுத்து வெற்றிபெறுவதே தனது குறிக்கோள் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM