தகவல் தொடர்பு மற்றும் தலைமைத்துவ திறன்களை வளர்த்தெடுப்பதற்காக தன்னை அர்ப்பணித்துள்ள சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டநெஷனல் நிறுவனம் மகத்தான நூற்றாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகிவருகிறது.
100வது வருடத்தை நெருங்குகின்ற நிலையில் டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டநெஷனல் தனது செழுமையான வரலாற்றை பற்றி கவனம் செலுத்துவது மாத்திரமல்லாமல், எதிர்காலத்தை பற்றியும் சிந்திக்கிறது.
இந்த உணர்வுகளுடன் 82 மாவட்ட டோஸ்ட்மாஸ்டர்ஸ் ஓவேசன் 2024 என்ற தனது வருடாந்த மாநாட்டை நடத்தவுள்ளது.
இந்த மாநாடு வெலிசரையின் அழகிய வேவ் என்லேக் மாநாட்டு மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.
ஒரு முக்கிய நிகழ்வு
சாதனையின் கலங்கரை விளக்கமாக காணப்படுவதுடன் டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டநெஷனலின் 100 வருடத்தையும் இலங்கை மாலைதீவு பிரிட்டிஷ் இந்து சமுத்திர பிரதேசத்தின் 82வது மாவட்ட டோஸ்ட்மாஸ்டர்ஸின் 40வது வருடத்தையும் கொண்டாடுகிறது.
இது ஒரே மாதிரியான எண்ணம் கொண்ட தனிநபர்களின் கூட்டம். ஒவ்வொருவரும் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சிறப்பு தன்மைக்கான அர்ப்பணிப்பை கொண்டுள்ளனர்.
வளர்ச்சிக்கான ஒரு தளம்
ஓவேசன் 2024 என்பது ஒரு மாநாடு மாத்திரமல்ல, இது தலைமைத்துவ ஆர்வம் கொண்டவர்கள், தொடர்பாடல் திறன் கொண்டவர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்துவதற்கான தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கான-பிராந்தியத்தில் உள்ள டோஸ்ட்மாஸ்டர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சுயமுன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான ஒரு வாய்ப்பாகும்.
ஒவேசன் 2024இன் சிறப்பம்சங்கள்
டோஸ்ட்மாஸ்டர்களின் நூற்றாண்டு கொண்டாட்டம் அமைப்பின் செழிப்பான வரலாறு மற்றும் சர்வதேச ரீதியிலான தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் விசேட நிகழ்வுகள் மற்றும் விளக்க காட்சிகள் மூலம் ஓவேசன் 2024 இந்த மைல்கல்லுக்கு பாராட்டுரைக்கும்.
பிரதம விருந்தினரின் பிரசன்னம்-டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டநெஷனலின் தலைவர் அமெரிக்கா மொராக்மதிசன் ஓவேசனின் பிரதம விருந்தினராக மொராக்மதிசன் டிம், டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டநெசனல் தலைவர் - டோஸ்ட்மாஸ்டர்ஸ் அமெரிக்கா அனுபவம் மற்றும் உள்நோக்கினை கொண்டுவருகிறார்.
அவரது பங்கேற்பு அவருடைய தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவம் மூலம் மாநாட்டுக்கு மகத்தான மதிப்பை சேர்க்கின்றது பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கின்றது.
முக்கிய உரைகள்
மாநாட்டில் நான்கு மிகவும் கௌரவம் மிக்க நபர்கள் முக்கிய உரைகளை ஆற்றுவார்கள்.
மொராக் மதீசன் டிடீஎம் டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டநெஷனலின் தலைவர் கொமர்ஷல் வங்கியினது முன்னாள் தலைவரும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் ஏ.கே.டபிள்யூ. ஜெயவர்த்தன ஜனசக்தி குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரமேஸ் ஸ்காப்டர், டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டநெஷனலின் 2017- 18 ஆண்டுகளின் தலைவராக செயற்பட்ட பால்ராஜ் அருணாசலம் ஆகியோர் உரையாற்றுவார்கள்.
கல்வி அமர்வுகள் பங்கேற்பவர்கள் ஐந்து அமர்வுகளில் பங்குகொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தொடர்பாடல் மற்றும் தலைமைத்துவத்திறனை வளர்ப்பதற்காக பல்வேறு தலைப்புகளில் ஐந்து புகழ்பெற்ற பயிற்சியாளர்கள் இந்த அமர்வுகளுக்கு தலைமைதாங்குவார்கள்.
பேச்சுப்போட்டி - இறுதி நிகழ்வுகள்
நான்கு பேச்சுப் போட்டிகளின் இறுதி நிகழ்வு இடம்பெறும்.
போட்டித்தன்மை மிக்க சூழலில் டோஸ்ட்மாஸ்டர்ஸை சேர்ந்தவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை இது வழங்கும்.
ஹோல்ஒவ் பேம் விருது வழங்கும் நிகழ்வு
கௌரவம் மிக்க விருது வழங்கும் நிகழ்வான ஹோல் ஒவ் பேமின்போது 82 மாவட்டத்தை சேர்ந்த தலைசிறந்த தலைவர்கள் தொடர்பாடல் திறன் பெற்றவர்கள் அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள்.
அவர்களின் சாதனைகள் டோஸ்ட்மாஸ்டருக்கான அவர்களின் பங்களிப்புகள் அங்கீகரிக்கப்படும்.
மகிழ்வான இரவு
ஒவேசன் 2024 ஒரு மகிழ்வான இரவுடன் முடிவடையும்.
இலங்கை மாலைதீவு மற்றும் பிரிட்டிஷ் இந்து சமுத்திர பகுதிகளை சேர்ந்த தொழில்சார் வல்லுநர்களை ஒன்றிணைத்து மாவட்டம் 82 உறுப்பினர்களுக்கு வலையமைப்பு வாய்ப்புகளையும் பொழுதுபோக்கு வாய்ப்புகளை வழங்கும்.
மீள்தன்மை மற்றும் சிறப்பின் கொண்டாட்டம்
ஒவேசன் 2024 82 மாவட்டத்தின் சாதனைகளை மாத்திரம் பிரதிநிதித்துவம் செய்யவில்லை மாறாக அதன் உறுப்பினர்களின் சாத்தியமான ஆற்றலையும் பிரதிநிதித்துவம் செய்கின்றது.
இது மீளும்தன்மை வளர்ச்சி சிறப்புதன்மை ஆகியவற்றின் கொண்டாட்டமாகும்.
சர்வதேச அளவில் உள்ள தனிநபர்களை வலுப்படுத்தும் விதத்தில் டோஸ்மாஸ்டர்ஸ் தனது அடுத்த நூற்றாண்டை நோக்கி பயணம் செய்கின்ற தருணத்தில் ஒவேசன் 2024 வலுவான தலைமைத்துவம் மற்றும் தொடர்பாடலின் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்திக்கான சான்றாக காணப்படுகின்றது.
கொண்டாட்டத்தில் இணையவும்
இலங்கை மாலைதீவுகள் மற்றும் பிரித்தானிய பெருங்கடல் பிரதேசம் ஆகியன இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொண்டாட்டத்தில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு அழைக்கின்றது.
ஓவேசன் 2024 என்றும் மனதில் நிலைத்திருக்கும் கற்றலுக்கான உத்வேகத்தை தரும் கூட்டுறவுக்கான மகிழ்ச்சியை தரும் ஒரு நிகழ்வாக நிச்சயம் காணப்படும்.
நீங்கள் அனுபவம் மிக்க டோஸ்ட்மாஸ்டராக இருந்தாலும் சரி, உங்களுடைய தலைமைத்துவம், தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் எண்ணம் உள்ளவராக இருந்தாலும் சரி ஒவேசன் 2024 தனது மகத்தான பயணத்தின் ஒரு பகுதியாக நீங்கள் காணப்படவேண்டும் என அழைக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM