தமிழ் திரையிசையுலகில் பாடல் பெரிதா? இசை பெரிதா? எனும் விவாதம் பரபரப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் முதன்முறையாக இசையமைப்பாளர் டி. இமானின் இசையில் பின்னணி பாடகர் மனோ பாடல் ஒன்றை பாடியிருப்பதாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு 'லெவன்' படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'லெவன்' எனும் திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, 'ஆடுகளம்' நரேன், திலீபன், ரித்விகா, அர்ஜெய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். புலனாய்வு வகையிலான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ. ஆர். எண்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் இந்த படத்தில் டி. இமானின் இசையில் பின்னணி பாடகர் மனோ முதன்முறையாக பாடியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டி. இமான் பேசுகையில், '' நிறைய இளம் கலைஞர்களையும், முன்னணி நட்சத்திர நடிகைகளையும் பாடகர்களாகவும், பாடகிகளாகவும் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். ஆனால் எம்முடைய திரையிசைப் பயணத்தில் இதுவரை பின்னணி பாடகரும், பன்முக கலைஞருமான மனோவுடன் இணைந்து பணியாற்றவில்லையே..! என்ற ஏக்கம் இருந்தது. அது இந்த படத்தின் மூலம் பூர்த்தியாகி இருக்கிறது. அவருடைய குரலுக்கு ஏற்ற வகையில் உணர்வுபூர்வமான பாடல் ஒன்றை வழங்கியிருக்கிறோம். அவரும் அதனை உணர்ந்து பாடி படக் குழுவினரை அசத்தியிருக்கிறார். இந்தப் பாடல் வெளியானதும் ரசிகர்களாலும் வரவேற்கப்படும் என நம்புகிறேன்'' என்றார்.
இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் பேசுகையில், '' படத்தின் முதல் காட்சியிலிருந்து உச்சகட்ட காட்சி வரை பார்வையாளர்கள் எளிதில் யூகிக்காத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. விறுவிறுப்பான புலனாய்வு பாணியிலான திரைக்கதையில், திறமையான நட்சத்திரங்களும் நடித்திருப்பதால் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகும் இந்த திரைப்படத்தின் புதிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM