இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடன் பெற்ற மோசமான தோல்வியினையடுத்து, அணியில் இரு மாற்றங்களை ஏற்படுத்த இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான நுவான் குலசேகர மற்றும் நுவான் பிரதீப் அணிக்குள் அழைக்கப்படலாம் என இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளிவரும் என நம்பப்படுகிறது.

இதேவேளை இலங்கை அணியின் லக்மால் அணியிலிருந்து உபாதை காரணமாக விலகக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.