(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி 2024 மே மாதம் 08ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டமையால் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1)ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த டயனா கமகே இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (08) தீர்ப்பளித்ததை தொடர்ந்து அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மானை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச பரிந்துரைத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM