வவுனியா செட்டிக்குளத்தில் வீடொன்றில் கடந்த  மாதம் தொழுவத்தில் கட்டிவிடப்பட்ட மாட்டினை காணவில்லை என செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.

இவ் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட செட்டிக்குளம் பொலிஸார் 39 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.