(கார்த்திகேயன் நடராஜன்)
தென்காசி மாவட்டம் அய்யாபுரத்தில் அமைந்துள்ள அன்னை தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஐந்து நாள் விழாவாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மே 3ஆம் திகதி தொடங்கிய இத்திருவிழா நேற்று (08) பகல் உச்சிகால பூஜையுடன் நிறைவுபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
திருவிழாவின் முதல் நாளான மே 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை (சித்திரை 20) இரவு 8 மணியளவில் சிறுவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணியளவில் பக்தர்களுக்கு காப்புக்கட்டு வைபவமும், அம்மனுக்கு சிறப்புப் பூஜையும் அதனைத் தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வடிவமைக்கப்பெற்ற சப்பரத்தில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரண்டாம் நாளில் (மே 4 சனிக்கிழமை) இரவு 8 மணியளவில் கலைநிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 01 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் கூடிய பூஜையும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வீதி உலாவும் நடைபெற்றது.
மூன்றாம் நாளில் (மே 5 ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணியளவில் கலைவாணி இன்னிசை குழுவின் கலை நிகழ்ச்சிகளும், அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் கூடிய பூஜையும், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.
நான்காம் நாளில் (மே 6 திங்கட்கிழமை) இரவு 9 மணியளவில் தேனி புகழ் தமிழ் பாரம்பரிய கரகாட்டமும் அதனைத் தொடர்ந்து தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மனுக்கு, மாக்காப்பு அலங்காரத்துடன் சிறப்புப் பூஜையும், நள்ளிரவில் அன்னப்பறவை வடிவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் பவனிவந்து பக்தர்களுக்கு அருள் பாவித்தார்.
ஐந்தாம் நாளில் (மே 7 செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி முதல் திரளான பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், முடி காணிக்கை செலுத்துதல், காது குத்துதல் ஆகிய நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள். மாலை 6 மணியளவில் சக்தி விநாயகர் ஆலயத்திலிருந்து தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மனுக்கு திருக்குற்றாலத்தீர்த்தம் எடுத்து வருதலும், இரவு 10 மணியளவில் மதுரைப்புகழ் பரமேஸ்வரி குழுவின் தமிழ் பாரம்பரிய கரகாட்டமும், அதனைத் தொடர்ந்து, அதிகாலை 4 மணியளவில் தமிழர் இசைக்கருவிகள் நாதஸ்வரம் நையாண்டி மேளம், உறுமி மேளம், சிங்காரி மேளம், டிரம்ஸ் செட், தாரை தப்பட்டை, கேரள செண்டை மேளம் முழங்க சிறப்பு அலங்காரத்துடன் கூடிய சிம்ம வாகன சப்பரத்தில் அமர்ந்து தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மன் வீதி உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். அச்சமயம் அம்மனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து தங்களின் வேண்டுதல்களை செலுத்தினார்கள்.
காலை சுமார் 11 மணியளவில் தமிழர் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டமும், அதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மனுக்கு சிறப்பு உச்சிகால பூஜையுடன் திருவிழா இனிதே நிறைவுற்றது.
அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருட்காட்சி கொடுத்த ஐந்து நாள் சித்திரை திருவிழா ஏற்பாட்டினை அய்யாபுரம் ஊர் நாட்டாண்மைகள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM