வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

இவ் விடயம் பற்றி அறியவருவதாவது,

கடந்த 8 ஆம் திகதி வவுனியா பாசார் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் ஒன்றினை உடைத்து களவாட முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 69 வயதான ரட்னாயக்க முதியன்சிலாகே ரம்பன்டா

 என்பவரே உயிரிழந்துள்ளார்.

 கடந்த 12 ஆம் திகதியன்று சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இதனால் அவரது நீதிமன்ற வழக்கு திகதிக்கு அவரால் சமூகம் தர முடியவில்லை எனவே வழக்கு எதிர்வரும் 29 திகதிவரை விளக்க மறியல் நீடிக்கப்பட்டது. 

இந்நிலையிலேயே குறிப்பிட்ட நபர் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருகிறார்.